Advertisement


புரோ கபடி: டில்லி கலக்கல்

நவம்பர் 20, 2022 23:58
 Comments  
 


Pro Kabaddi League 2022, Delhi Beat Haryana, Bangalore Loss to Pune
 

ஐதராபாத்: ஹரியானா அணிக்கு எதிரான புரோ கபடி லீக் போட்டியில் அசத்திய டில்லி அணி 42–30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியாவில், புரோ கபடி லீக் 9வது சீசன் நடக்கிறது. ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் டில்லி, ஹரியானா அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய டில்லி அணி, ஹரியானா வீரர்களை ‘ஆல்–அவுட்’ செய்தது. முதல் பாதி முடிவில் டில்லி அணி 24–13 என முன்னிலையில் இருந்தது.

 

இரண்டாவது பாதியிலும் அசத்திய டில்லி வீரர்கள், ஹரியானா அணியினரை மீண்டும் ‘ஆல்–அவுட்’ செய்தனர். தொடர்ந்து போராடிய ஹரியானா அணியினரால் எழுச்சி பெற முடியவில்லை. ஆட்டநேர முடிவில் டில்லி அணி 42–30 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. டில்லி அணிக்கு நவீன் குமார் 15, அஷு மாலிக் 10 புள்ளி பெற்றுத் தந்தனர். ஹரியானா அணிக்கு பிரபஞ்சன் (9 புள்ளி), மன்ஜீத் (7) ஆறுதல் தந்தனர்.

 

இதுவரை விளையாடிய 16 போட்டியில், 8 வெற்றி, 8 தோல்வி என 45 புள்ளிகளுடன் டில்லி அணி 5வது இடத்துக்கு முன்னேறியது. ஹரியானா அணி 36 புள்ளிகளுடன் (5 வெற்றி, 2 ‘டை’, 9 தோல்வி) 10வது இடத்தில் உள்ளது.

 

மற்றொரு  போட்டியில் பெங்களூரு அணி 33–35 என்ற கணக்கில் புனே அணியிடம் தோல்வியடைந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?