Advertisement


மோகன் பகான் ஏமாற்றம்: கோவா அணியிடம் வீழ்ந்தது

நவம்பர் 20, 2022 23:53
 Comments  
 


Indian Super League Soccer 2022, ISL Football, Goa Beat Mohun Bagan
 

கோவா: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் ஏமாற்றிய மோகன் பகான் அணி 0–3 என, கோவா அணியிடம் தோல்வியடைந்தது.

இந்தியாவில், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 9வது சீசன் நடக்கிறது. கோவாவில் நடந்த லீக் போட்டியில் கோவா, கோல்கட்டா மோகன் பகான் அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.

 

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட கோவா அணிக்கு 50வது நிமிடத்தில் ஐபன்பா டோஹ்லிங் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். தொடர்ந்து அசத்திய கோவா அணிக்கு அர்னாவுட் (76வது நிமிடம்), நோவா சதாயுய் (82வது) தலா ஒரு கோல் அடித்தனர். கடைசி நிமிடம் வரை போராடிய மோகன் பகான் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

 

ஆட்டநேர முடிவில் கோவா அணி 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 6 போட்டியில், 4 வெற்றி, 2 தோல்வி என, 12 புள்ளிகளுடன் கோவா அணி 3வது இடத்துக்கு முன்னேறியது. இரண்டாவது தோல்வியை பெற்ற மோகன் பகான் அணி (10 புள்ளி, 3 வெற்றி, ஒரு ‘டிரா’) 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?