Advertisement


தமிழகம் கலக்கல் வெற்றி: சுதர்சன், ஜெகதீசன் சதம்

நவம்பர் 17, 2022 21:44
 Comments  
 


Vijay Hazare Trophy Cricket, Tamil Nadu Beat Goa, Narayan Jagadeesan, Sai Sudharsan
 

ஆலுார்: கோவா அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி லீக் போட்டியில் சுதர்சன், ஜெகதீசன் சதம் விளாச, தமிழக அணி 57 ரன் வித்தியாசத்தில் 3வது வெற்றி பெற்றது.

விஜய் ஹசாரே டிராபி (‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்) 21வது சீசன் நடக்கிறது. மொத்தம் 38 அணிகள், 5 பிரிவுகளாக விளையாடுகின்றன. தமிழக அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஆந்திராவின் ஆலுாரில் நடந்த லீக் போட்டியில் தமிழகம், கோவா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கோவா அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

 

தமிழக அணிக்கு சாய் சுதர்சன், நாராயண் ஜெகதீசன் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. அபாரமாக ஆடிய இவர்கள் இருவரும் சதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 276 ரன் சேர்த்த போது சுதர்சன் (117) அவுட்டானார். ஜெகதீசன் (168) நம்பிக்கை தந்தார். ஷாருக்கான் (29), ஜெகதீசன் கவுசிக் (12) நிலைக்கவில்லை. தமிழக அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 373 ரன் குவித்தது. பாபா அபராஜித் (31), சோனு யாதவ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

கடின இலக்கை விரட்டிய கோவா அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 316 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இஷான் கடேகர் (51), சினேகல் கவுதாங்கர் (67), ஏக்நாத் கெர்கர் (50), சித்தேஷ் லத் (62*) அரைசதம் விளாசினர். தமிழகம் சார்பில் சந்தீப் வாரியர், பாபா அபராஜித், சித்தார்த், சோனு யாதவ், சாய் கிஷோர், சுதர்சன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?