Advertisement


கோப்பை வென்றது சுவிட்சர்லாந்து

நவம்பர் 14, 2022 22:59
 Comments  
 


Switzerland beats Australia to win Billie Jean King Cup
 

கிளாஸ்கோ: ‘பில்லி ஜீன் கிங்’ டென்னிஸ் தொடரில் சுவிட்சர்லாந்து பெண்கள் அணி முதன் முறையாக கோப்பை வென்றது.

பெண்கள் டென்னிசின் உலகின் ‘நம்பர்–1’ தொடர் ‘பில்லி ஜீன் கோப்பை’. 59 ஆண்டு பழமையான இத்தொடரின் ‘வேர்ல்டு குரூப் பைனல்சில்’ 12 அணிகள் மோதின. அரையிறுதியில் சுவிட்சர்லாந்து அணி, 2–0 செக் குடியரசை வென்றது. ஆஸ்திரேலியா 2–1 என பிரிட்டனை வீழ்த்தியது.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்த பைனலில் சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா மோதின. முதல் ஒற்றையரில் ஜில் டெய்ச்மான், சாண்டர்ஸ் மோதினர். இதில் டெய்ச்மான் 6–3, 4–6, 6–3 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இரண்டாவது ஒற்றையரில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், ஆஸ்திரேலியாவின் அஜ்லாவை சந்தித்தார்.

முதல் செட்டை 6–2 என எளிதாக வென்ற பென்சிக், அடுத்த செட்டை 6–1 என கைப்பற்றினார். முடிவில் பென்சிக் 6–2, 6–1 என எளிதாக வென்றார். இதையடுத்து 2–0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது.

‘பில்லி ஜீன் கிங்’ தொடரில் முதன் முறையாக சாம்பியன் ஆனது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?