Advertisement


பைனலில் சுனைனா * சென்னை ஸ்குவாஷ் தொடரில்

செப்டம்பர் 22, 2022 22:50
 Comments  
 


Indian Tour squash Abhay Singh, Sunayna Kuruvilla pull off upset wins
 

சென்னை: இந்தியன் டூர் ஸ்குவாஷ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் சுனைனா, அபே சிங் முன்னேறினர்.

சென்னையில் இந்தியன் டூர் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகத் தரவரிசையில் 165 வது இடத்திலுள்ள இந்தியாவின் சுனைனா, ‘நம்பர்–63’ இடத்திலுள்ள எகிப்தின் சல்மாவை சந்தித்தார். முதல் செட்டை 11–6 என வென்ற சுனைனா, அடுத்த செட்டை 11–7 என கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், மூன்றாவது செட்டையும் 13–11 என வசப்படுத்தினார். 26 நிமிடம் நடந்த போட்டியில் சுனைனா 3–0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் தன்வி, எகிப்தின் கென்சி மோதினர். முதல் இரண்டு செட்டை 13–11, 11–9 என வென்ற தன்வி, பின் திடீரென சொதப்பினார். அடுத்த மூன்று செட்டுகளை 6–11, 5–11, 5–11 என இழந்தார். முடிவில் தன்வி 2–3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அபே சிங், எகிப்தின் யாசினை எதிர்கொண்டார். முதல் செட்டை 11–8 என வென்ற அபே சிங், அடுத்த இரு செட்டை 5–11, 4–11 என இழந்தார். 4வது செட்டை 11–4 என கைப்பற்றிய அபே சிங், கடைசி செட்டை 12–10 என போராடி வென்றார். முடிவில் அபே சிங் 3–2 என வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?