Advertisement


காலிறுதியில் அர்ஜுன், பிரக்ஞானந்தா * சாம்பியன்ஸ் செஸ் தொடரில் கலக்கல்

செப்டம்பர் 22, 2022 22:34
 Comments  
 


Meltwater Champions Chess Tour, Praggnanandhaa, Magnus Carlsen sdgf
 

நியூயார்க்: ‘சாம்பியன்ஸ் செஸ் டூர்’ தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் அர்ஜுன், பிரக்ஞானந்தா முன்னேறினர்.

‘சாம்பியன்ஸ் செஸ் டூர்’ தொடர் (மொத்தம் 9 தொடர்) ஆன்லைன் வழியாக நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக ‘ஜூலியஸ் பயர்’ கோப்பை தொடர் தற்போது நடக்கிறது.

முதற்கட்ட போட்டிகளில் உலக சாம்பியன், நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உட்பட 16 பேர் பங்கேற்றனர். கடைசி சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, குரோஷியாவின் இவான் சாரிக்கை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 63வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்திய வீரர் அர்ஜுன், நெதர்லாந்தின் அனிஸ் கிரியிடம் தோல்வியடைந்தார்.

காலிறுதிக்கு தகுதி

மொத்தம் நடந்த 15 சுற்று முடிவில் பட்டியலில் ‘டாப்–8’ இடம் பெற்ற வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறினர். கார்ல்சன் (34 புள்ளி), அர்ஜுன் (25), அமெரிக்காவின் ஹான்ஸ் மோக் (24), பிரக்ஞானந்தா (23) முதல் நான்கு இடங்களை பிடித்து அசத்தினர். காலிறுதியில் பிரக்ஞானந்தா 17, ஜெர்மனியன் வின்சென்டை 17, சந்திக்கிறார். அர்ஜுன் 19, அமெரிக்காவின் கிறிஸ்டோபரை 15, சந்திக்கிறார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?