Advertisement


சத்யன், சரத் கமல் வெற்றி: தேசிய விளையாட்டில் அசத்தல்

செப்டம்பர் 22, 2022 21:34
 Comments  
 


National Games 2022, Table Tennis, Sathiyan, Sharath Kamal, Harmeet Desai, Manav Thakkar, Manika Batra
 

சூரத்: தேசிய விளையாட்டுக்கான டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் சத்யன், சரத் கமல், மணிகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

குஜராத்தில், வரும் செப். 29 முதல் அக். 10 வரை தேசிய விளையாட்டு 36வது சீசன் நடக்கவுள்ளது. இதற்கான டேபிள் டென்னிஸ் போட்டி, சூரத்தில் முன்கூட்டியே நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தமிழகத்தின் சத்யனுக்கு ‘பை’ வழங்கப்பட்டது. இரண்டாவது சுற்றில் சத்யன், ஹரியானாவின் வெஸ்லே டோ ரோசேரியோ மோதினர். அபாரமாக ஆடிய சத்யன் 4–0 (13–11, 11–6, 11–4, 11–5) என்ற கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

 

மற்றொரு முதல் சுற்றில் ‘பை’ வழங்கப்பட்ட தமிழகத்தின் அஜந்தா சரத் கமல், 2வது சுற்றில் மஹாராஷ்டிராவின் ரவிந்திராவை சந்தித்தார். இதில் அசத்திய சரத் கமல் 4–0 (11–9, 11–6, 11–6, 17–15) என்ற கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

 

மற்ற 2வது சுற்றுப் போட்டிகளில் குஜராத்தின் மானவ் விகாஸ் தக்கர், ஹர்மீத் தேசாய், மேற்கு வங்கத்தின் அனிர்பன் கோஷ், ஜீத் சந்திரா, மஹாராஷ்டிராவின் சனில் ஷங்கர் ஷெட்டி, டில்லியின் பயாஸ் ஜெயின், ஹரியானாவின் சவுமியாஜித் கோஷ் வெற்றி பெற்றனர்.

 

பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் டில்லியின் மணிகா பத்ரா 4–0 (11–5, 11–8, 11–6, 11–8) என்ற கணக்கில் தெலுங்கானாவின் பிரனிதாவை தோற்கடித்தார். மற்ற 2வது சுற்றுப் போட்டிகளில் மேற்கு வங்கத்தின் சுதிர்தா முகர்ஜீ, மவுமா தாஸ், அய்ஹிகா முகர்ஜீ, ஹரியானாவின் சுஹானா சைனி வெற்றி பெற்றனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?