Advertisement


லேவர் கோப்பை: சாதிப்பாரா பெடரர்

செப்டம்பர் 22, 2022 21:27
 Comments  
 


Laver Cup Tennis 2022, Roger Federer, Nadal
 

லண்டன்: லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் பெடரர் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தின் லண்டனில், லேவர் கோப்பை டென்னிஸ் 5வது சீசன் இன்று முதல் செப். 5 வரை நடக்கிறது. இதில் ஐரோப்பா, உலக அணிகள் மோதுகின்றன. ஐரோப்பா அணி சார்பில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரே, கிரீசின் ஸ்டெபானஸ் டிசிட்சிபாஸ், நார்வேயின் காஸ்பர் ரூட் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். உலக அணிக்காக ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், அர்ஜென்டினாவின் ஸ்வார்ட்ஸ்மேன், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், டாமி பால், ஜாக் சோக் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர்.

 

இப்போட்டிக்கு பின், டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெறவுள்ள பெடரர் 41, மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள இவர், கடைசியாக கடந்த ஆண்டு விம்பிள்டனில் விளையாடினார். அதன்பின், முழங்கால் காயத்துக்கு ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்டதால் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

 

இன்று நடக்கவுள்ள இரட்டையர் பிரிவு போட்டியில் பெடரர், ஸ்பெயினின் நடாலுடன் இணைந்து விளையாடுகிறார். இதற்கு முன் 2017ல் பெடரர்–நடால் ஜோடி விளையாடி வெற்றி பெற்றது. இம்முறை இந்த ஜோடி, அமெரிக்காவின் ஜாக் சோக், பிரான்சஸ் தியாபோ ஜோடியை எதிர்கொள்கிறது. கடைசி தொடரில் பங்கேற்கும் பெடரர், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையுடன் விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?