Advertisement


செத்ரியை தள்ளியதால் சர்ச்சை

செப்டம்பர் 19, 2022 22:13
 Comments  
 


Sports Fraternity, Fans Slam WB Guvernor For Pushing Sunil Chhetri to Pose With Trophy
 

கோல்கட்டா: கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் சுனில் செத்ரியை, கவர்னர் இல. கணேசன் லேசாக தள்ளியதால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்தியாவில் பாரம்பரியமிக்க துாரந்த் கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதன் பைனலில் சுனில் செத்ரி தலைமையிலான பெங்களூரு அணி, மும்பையை சாய்த்து கோப்பை வென்றது. இதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சியில் சிறந்த வீரர்களுக்கான கோப்பை வழங்கிய போது, மேற்குவங்க விளையாட்டுத் துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ், பெங்களூரு வீரர் சிவஷக்தியை இடது கையால் தள்ளி, போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுத்தார்.

அடுத்து துாரந்த் கோப்பையை, மேற்குவங்க பொறுப்பு கவர்னர் இல. கணேசன் வழங்கினார். அப்போது ‘கேமராவில்’ சரியாகத் தெரியவில்லை என்பதால், பெங்களூரு அணி கேப்டன், ‘நம்பர்–1’ வீரர் சுனில் செத்ரியின் வலது தோளில் கையை வைத்து தள்ளினார் இல. கணேசன். இதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்...

கடந்த 2006ல் மும்பையில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாண்டிங்கின் ஆஸ்திரேலிய அணி வென்றது. இதற்கான கோப்பை வழங்கினார் அப்போதைய இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் சரத்பவார். இவரை இடது கையால் தோளில் தட்டி அழைத்த பாண்டிங், கோப்பையை தருமாறு கேட்டு வாங்கினார். மற்றொரு வீரர் சரத்பவாரை மேடையில் இருந்து ஓரமாக தள்ளி விட்டார். இந்த சம்பவத்துக்காக பாண்டிங், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு மன்னிப்பு கேட்கப்பட்டது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?