Advertisement


ஓட்டல் அறையில் பாம்பு: பயந்த மிட்சல் ஜான்சன்

செப்டம்பர் 19, 2022 22:09
 Comments  
 


Mitchell Johnson, Australia Cricketer, Legends League Cricket, India Capitals, Hotel Room in Lucknow, Snake
 

லக்னோ: மிட்சல் ஜான்சன் தங்கி இருந்த ஓட்டல் அறைக்குள் பாம்பு ஒன்று புகுந்து அதிர்ச்சி அளித்தது.

இந்தியாவில், ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் ‘லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்’ தொடர் (‘டி–20’) நடக்கிறது. இதில் தென் ஆப்ரிக்க ‘ஆல்–ரவுண்டர்’ காலிஸ் தலைமையிலான ‘இந்தியா கேப்பிட்டல்ஸ்’ அணிக்காக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஜான்சன் 40, விளையாடி வருகிறார். சமீபத்தில் லக்னோவில் நடந்த குஜராத் அணிக்கு எதிரான போட்டிக்கு பின், ஓட்டல் அறைக்கு திரும்பிய ஜான்சனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது அறையின் வாசல் கதவில் சிறிய பாம்பு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. பின்னர் பாம்பு அங்கிருந்து அகற்றப்பட்டது.

 

இதுகுறித்து ஜான்சன் கூறுகையில், ‘‘இது எந்த வகை பாம்பு என்று தெரியவில்லை. என் அறையின் வாசல் கதவில் தொங்கிக் கொண்டிருந்தது,’’ என்றார்.

 

கடந்த 2015ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜான்சன், 73 டெஸ்ட் (313 விக்கெட்), 153 ஒருநாள் (239 விக்கெட்), 30 சர்வதேச ‘டி–20’ (38 விக்கெட்) போட்டிகளில் விளையாடி உள்ளார். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் வேகத்தில் அசத்திய ஜான்சன், கேப்டன் சேவக்கை 6 ரன்னில் அவுட்டாக்கிய போதும், இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி தோல்வியடைந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?