Advertisement


அன்கிதா ரெய்னா தகுதி

செப்டம்பர் 18, 2022 22:59
 Comments  
 


Korea Open Tennis, Singles Qualification, Ankita Raina
 

சியோல்: டபிள்யு.டி.ஏ., கொரிய ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றுக்கு இந்திய வீராங்கனை அன்கிதா தகுதி பெற்றார்.

தென் கொரியாவில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., கொரிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்றுக்கான முதல் போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, சகவீராங்கனை ரியா பாட்யாவை வீழ்த்தினார். நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் அன்கிதா, கிரீசின் வேலன்டினி மோதினர்.

 

‘டை பிரேக்கர்’ வரை நீடித்த முதல் செட்டை 7–6 எனக் கைப்பற்றிய அன்கிதா, மீண்டும் ‘டை பிரேக்கர்’ வரை சென்ற இரண்டாவது செட்டை 6–7 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட இவர், 6–0 என வென்று பதிலடி தந்தார். மூன்று மணி நேரம், 2 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய அன்கிதா 7–6, 6–7, 6–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பிரதான சுற்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?