Advertisement


சென்னை ஓபன்: லிண்டா ‘சாம்பியன்’

செப்டம்பர் 18, 2022 22:48
 Comments  
 


Chennai Open Tennis, Linda Fruhvirtova, Champion
 

சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசின் லிண்டா சாம்பியன் பட்டம் வென்றார்.

சென்னையில், முதன்முறையாக பெண்களுக்கான ‘டபிள்யு.டி.ஏ., 250’ அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் போலந்தின் மக்டா லினெட், செக்குடியரசின் லிண்டா புருஹ்விர்டோவா மோதினர். முதல் செட்டை 4–6 என இழந்த லிண்டா, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6–3 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய லிண்டா 6–4 என வென்றார்.

 

இரண்டு மணி நேரம், 40 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய லிண்டா 6–4, 3–6, 6–4 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதன்முறையாக டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவில் கோப்பை வென்றார்.

 

கேப்ரியேலா – லுாயிசா சாம்பியன்

 

இரட்டையர் பிரிவு பைனலில் கனடாவின் கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி, பிரேசிலின் லுாயிசா ஸ்டெபானி ஜோடி, ரஷ்யாவின் அனா பிளிங்கோவா, ஜார்ஜியாவின் நடேலா டிசலமிட்ஜ் ஜோடியை எதிர்கொண்டது. முதல் செட்டை 6–1 என மிகச் சுலபமாக கைப்பற்றிய கனடா–பிரேசில் ஜோடி, இரண்டாவது செட்டை 6–2 என தன்வசப்படுத்தியது. மொத்தம் 58 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய கேப்ரியேலா, லுாயிசா ஜோடி 6–1, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?