Advertisement


பைனலில் மேற்கு – தெற்கு மண்டலம்: துலீப் டிராபியில் மோதல்

செப்டம்பர் 18, 2022 22:36
 Comments  
 


Duleep Trophy Cricket 2022, West Zone, South Zone, Final
 

கோவை: துலீப் டிராபி கிரிக்கெட் பைனலுக்கு மேற்கு, தெற்கு மண்டல அணிகள் முன்னேறின.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் துலீப் டிராபி 59வது சீசன் நடக்கிறது. கோவை, ஆவாரம்பாளையம் ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதியில் மேற்கு, மத்திய மண்டல அணிகள் மோதின.

 

முதல் இன்னிங்சில் மேற்கு மண்டலம் 257, மத்திய மண்டலம் 128 ரன் எடுத்தன. மேற்கு மண்டல அணி, இரண்டாவது இன்னிங்சில் 371 ரன் குவித்தது. பின், 501 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய மத்திய மண்டல அணி, 3ம் நாள் முடிவில் 33/2 ரன் எடுத்திருந்தது.

 

நான்காம் நாள் ஆட்டத்தில் மத்திய மண்டல அணிக்கு குமார் கார்த்திகேயா (39), சுபம் சர்மா (24) ஆறுதல் தந்தனர். பொறுப்பாக ஆடிய ரிங்கு சிங் (65) அரைசதம் கடந்தார். மத்திய மண்டல அணி 2வது இன்னிங்சில் 221 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்டாகி’, 279 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மேற்கு மண்டலம் சார்பில் ஷாம்ஸ் முலானி 5 விக்கெட் கைப்பற்றினார். ஆட்ட நாயகன் விருதை பிரித்வி ஷா (மேற்கு மண்டலம்) வென்றார்.

 

தெற்கு மண்டலம் அபாரம்

சேலத்தில் நடந்த 2வது அரையிறுதியில் தெற்கு, வடக்கு மண்டல அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் தெற்கு 630/8 (‘டிக்ளேர்’), வடக்கு 207 ரன் எடுத்தது. 

மூன்றாம் நாள் முடிவில் தெற்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 157/1 ரன் எடுத்திருந்தது. நான்காம் நாள் ஆட்டத்தில் மயங்க் அகர்வால் (64), ரவி தேஜா (104*) கைகொடுக்க தெற்கு மண்டல அணி 2வது இன்னிங்சில் 316/4 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது.

 

பின், 740 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வடக்கு மண்டல அணி, 2வது இன்னிங்சில் 94 ரன்னுக்கு சுருண்டு, 645 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. யாஷ் துல் (59) ஆறுதல் தந்தார். தெற்கு மண்டலம் சார்பில் கிருஷ்ணப்பா கவுதம், சாய் கிஷோர், தனய் தியாகராஜன் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

 

ஆட்ட நாயகன் விருதை சாய் கிஷோர் (தெற்கு மண்டலம்) வென்றார். வரும் செப். 21–25ல் கோல்கட்டாவில் நடக்கவுள்ள பைனலில் மேற்கு, தெற்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?