Advertisement


சென்னை ஓபன்: பைனலில் லிண்டா * 17 வயதில் அசத்தல் வெற்றி

செப்டம்பர் 17, 2022 22:57
 Comments  
 


Chennai open tennis, india, Czech Republic Linda Fruhvirtova
 

 சென்னை: சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு முன்னேறினார் செக் குடியரசின் லிண்டா. அரையிறுதியில் அர்ஜென்டினாவின் நாடியாவை போராடி வீழ்த்தினார்.

சென்னையில், முதன்முறையாக பெண்களுக்கான ‘டபிள்யு.டி.ஏ., 250’ அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் உலகத் தரவரிசையில் 130 வது இடத்திலுள்ள செக் குடியரசின் 17 வயது வீராங்கனை லிண்டா புருக்விர்டோவா, அர்ஜென்டினாவின் நாடியா பொடோரோஸ்காவை 25, (298 வது இடம்) சந்தித்தார். முதல் செட்டை  நாடியா 7–5 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் எழுச்சி பெற்ற லிண்டா, 6–2 என வென்று பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது செட்டில் லிண்டா 2–4 என பின் தங்கினார். பின் தொடர்ந்து நான்கு ‘கேம்களை’ கைப்பற்ற, மூன்றாவது செட்டை 6–4 என வசப்படுத்தினார்.

2 மணி நேரம், 45 நிமிடம் நடந்த போராட்டதின் முடிவில் லிண்டா, 5–7, 6–2, 6–4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, டபிள்யு.டி.ஏ., தொடரில் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறினார்.

சுவான் அபாரம்

காலிறுதியில் உலகத் தரவரிசையில் 174 வது இடத்திலுள்ள இங்கிலாந்தின் கேட் சுவான், 185வது இடத்திலுள்ள ஜப்பானின் நாவோ ஹிபினோவை சந்தித்தார். இதில் சுவான் 6–3, 3–6, 6–3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார்.

 

கேபிரியலா–ஸ்டெபானி அபாரம்

சென்னை ஓபன் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் கனடாவின் கேபிரியலா தப்ரோவ்ஸ்கி, பிரேசிலின் லுய்சா ஸ்டெபானி ஜோடி, தாய்லாந்தின் பியாங்டர்ன், ஜப்பானின் மோயிகா ஜோடியை சந்தித்தது. இதில் கேபிரியலா, ஸ்டெபானி ஜோடி 6–3, 6–3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?