Advertisement


இளம் இந்தியா சாம்பியன் * தெற்காசிய கால்பந்து தொடரில்

செப்டம்பர் 14, 2022 21:51
 Comments  
 


SAFF U 17 Championship 2022, india beat NEPAL
 

கொழும்பு: தெற்காசிய கால்பந்து தொடரில் இந்திய இளம் அணி சாம்பியன் ஆனது. நேற்று நடந்த பைனலில் 4–0 என நேபாளத்தை வீழ்த்தியது.

இலங்கையில் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (17 வயது) தொடரின் 7வது சீசன் நடந்தது. ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, மாலத்தீவு, இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம் என 6 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றில் இரண்டாவது இடம் பிடித்த இந்திய அணி, அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தியது.

நேற்று பைனல் நடந்தது. இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. இதற்கு முன் நடந்த மூன்று பைனலிலும் இந்திய அணி, நேபாளத்தை சாய்த்து கோப்பை வென்றிருந்தது. ஆனால், இம்முறை லீக் சுற்றில் நேபாளத்திடம் தோற்றதால் இந்திய அணி, சுதாரித்துக் கொண்டது.

போட்டியின் 18 வது நிமிடம் ரிக்கி மீட்டெய் கொடுத்த பந்தை பெற்ற இந்தியாவின் வன்லால்பெகா, கோலாக மாற்றி அசத்தினார். 30 வது நிமிடம் இந்திய வீரர் திங்குஜம், தன் பங்கிற்கு ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்திய அணி 2–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய இந்திய வீரர் வன்லால்பெகா, தனது இரண்டாவது கோல் அடித்து மிரட்டினார். இரண்டாவது பாதியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் இந்திய வீரர் அமன் (90+4வது) ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை தட்டிச் சென்றது.

 

நான்காவது கோப்பை

தெற்காசிய கால்பந்து, 17 வயதுக்குட்பட்ட தொடரில் சாதித்த இந்திய அணி 2013 (1–0) 2017 (2–1), 2019 (6–0) மற்றும் 2022 (4–0) என நான்காவது முறையாக கோப்பை வென்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?