Advertisement


இந்திய அணி தோல்வி

செப்டம்பர் 13, 2022 21:56
 Comments  
 


India vs Bangladesh SAFF Women Championship
 

 காத்மண்டு: தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி 0–3 என வங்கதேசத்திடம் வீழ்ந்தது.

நேபாளத்தில், பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 6வது சீசன் நடக்கிறது. ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட 7 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் வங்கதேசம், பாகிஸ்தான், மாலத்தீவு அணிகளுடன் இடம் பிடித்தது.

முதல் இரு போட்டியில் பாகிஸ்தான், மாலத்தீவு அணிகளை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. நேற்று தனது மூன்றாவது, கடைசி லீக் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது.

போட்டியின் 12வது நிமிடத்தில் வங்கதேசத்தின் சிராத் ஜஹான் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இந்த அணிக்கு 23வது நிமிடம் ராணி, இரண்டாவது கோல் அடித்து கைகொடுத்தார். முதல் பாதியில் இந்திய அணி 0–2 என பின்தங்கியது.

இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய சிராத் ஜஹான், இரண்டாவது கோல் அடித்து உதவினார்.

கடைசி வரை போராடிய போதும் இந்திய அணி தரப்பில் ஒரு கோல் கூட அடிக்கப்படவில்லை. முடிவில் இந்திய அணி 0–3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. செப். 16ல் நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி, நேபாளத்தை சந்திக்க உள்ளது.

நேற்று நடந்த மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி 7–0 என மாலத்தீவு அணியை வென்றது.

 

25

இந்திய பெண்கள் கால்பந்து அணி சர்வதேச தரவரிசையில் 58 வது இடத்தில் உள்ளது. 147வது இடத்திலுள்ள வங்கதேசத்திடம் 0–3 என தோற்றது. இதையடுத்து சர்வதேச அரங்கில் தொடர்ந்து 25 போட்டிகளில் வெற்றி பெற்று வந்த இந்திய பெண்கள் அணியின் வெற்றி நடை முடிவுக்கு வந்தது. 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?