Advertisement


பைனலில் இளம் இந்தியா * தெற்காசிய கால்பந்தில் அசத்தல்

செப்டம்பர் 12, 2022 22:07
 Comments  
 


SAFF U 17 Championship 2022, india beat Bangladesh
 

கொழும்பு: தெற்காசிய கால்பந்து தொடரின் பைனலுக்கு இந்தியா முன்னேறியது. நேற்று நடந்த அரையிறுதியில் 2–1 என்ற கோல் கணக்கில் வங்கதேசத்தை சாய்த்தது.

இலங்கையில் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (17 வயது) தொடரின் 7வது சீசன் நடக்கிறது. ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, மாலத்தீவு, இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம் என 6 அணிகள் பங்கேற்கின்றன. ‘பி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, லீக் சுற்றில் பங்கேற்ற 2 போட்டியில் தலா 1 வெற்றி, தோல்வி என 3 புள்ளி பெற்று, பட்டியலில் இரண்டாவது இடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.

காங்டே அபாரம்

இதில் நேற்று, ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெற்ற வங்கதேசத்தை எதிர்கொண்டது. முதல் பாதியில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி துவங்கிய 6வது நிமிடத்தில் இந்திய வீரர் காங்டே (51வது) ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இவர், 59வது நிமிடம் இந்திய அணிக்காக இரண்டாவது கோல் அடித்து கைகொடுத்தார்.

போட்டியின் 62 வது நிமிடம் வங்கதேச அணிக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு கிடைத்தது. இதில் மிரஜுல் கோல் அடித்தார். இதன் பின் இரு அணி தரப்பிலும் யாரும் கோல் அடிக்கவில்லை. முடிவில் இந்திய அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது. இதில் இலங்கை அல்லது நேபாளத்தை நாளை சந்திக்கவுள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?