Advertisement


இந்திய விளையாட்டின் பொற்காலம் * பிரதமர் மோடி பெருமிதம்

ஆகஸ்ட் 13, 2022 22:58
 Comments  
 


PM Modi hosts India Commonwealth Games contingent
 

புதுடில்லி: ‘‘இந்திய விளையாட்டின் பொற்காலம் துவங்கிவிட்டது,’’ என பிரதமர் மோடி தெரிவித்தார். 

இங்கிலாந்தின் பர்மிங்காமில் 22வது காமன்வெல்த் விளையாட்டு நடந்தது. இந்தியா சார்பில் 215 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கம் வென்று, பட்டியலில் இந்தியா நான்காவது இடம் பிடித்தது. மல்யுத்தத்தில் அதிகபட்சமாக இந்தியாவுக்கு 6 தங்கம் உட்பட பங்கேற்ற 12 பேரும் பதக்கம் வென்று கைகொடுத்தனர். பளுதுாக்குதலில் 6 தங்கம் உட்பட 10 பதக்கம் கிடைத்தது. 

 காமன்வெல்த்தில் அசத்திய வீரர், வீராங்கனைகளுக்கு தனது இல்லத்தில் விருந்து அளித்தார் பிரதமர் மோடி. 

அப்போது மோடி கூறியது:

காமன்வெல்த் விளையாட்டில் சாதித்த அனைவரையும் வரவேற்கிறேன். ஒவ்வொரு இந்தியர் போல நானும், உங்களுடன் பேசுவதில் உற்சாகம் அடைகிறேன். வீரர், வீராங்கனைகளின் உண்மையான செயல்திறனை பதக்கங்களை வைத்து மட்டும் மதிப்பீடு செய்ய முடியாது. வெற்றிக்காக கடுமையாக போராடினர். வெற்றி அல்லது தோல்வி வித்தியாசம் 1 வினாடி அல்லது 1 செ.மீ., என இருந்திருக்கலாம். எதிர்காலத்தில் இதை சரிசெய்து வெற்றி பெறுவோம்.

புதிய பதக்கம்

ஏற்கனவே நாம் பலமாக உள்ள விளையாட்டுகளில் அதிகம் சாதித்தது மட்டுமன்றி, புதிய விளையாட்டுகளிலும் பதக்கம் பெறத் துவங்கியுள்ளோம். ஹாக்கியில் மீண்டும் நமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான போராட்டம் துவங்கியுள்ளது.

கடந்த முறையை விட, தற்போது நான்கு புதிய விளையாட்டுகளில் பதக்கம் வென்றுள்ளோம். லான் பவுல்ஸ், தடகளத்தில் நம்மவர்களின் திறமை வியக்க வைக்கிறது. இதுபோன்ற அசத்தல்களால் இளம் நட்சத்திரங்களுக்கு புதிய விளையாட்டுகள் மீது ஆர்வம் ஏற்படும். புதிய விளையாட்டுகளில் நாம் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும்.

இது ஆரம்பம்

இது ஆரம்பம் மட்டும் தான். இனிமேல் நாம் அமைதியாக இருக்கப் போவதில்லை. காமன்வெல்த்தில் வரலாற்று சிறப்புமிக்க சாதனை, 20 வயதுக்குட்பட்ட உலக தடகளத்தில் பதக்கம், முதன் முதலாக செஸ் ஒலிம்பியாட்டை நடத்தியது என கடந்த சில வாரங்களாக விளையாட்டில், இந்தியா இரண்டு முக்கிய சாதனைகளை பதிவு செய்தது. இந்திய விளையாட்டின் பொற்காலம் துவங்கிவிட்டது. 

அடுத்து, உலகின் சிறந்த, பன்முகத்தன்மை கொண்ட, ஆற்றல் வாய்ந்த விளையாட்டு அமைப்பை உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது. இங்கு எந்த திறமையும் விடுபட்டுவிடக் கூடாது. அவர்கள் அனைவரும் நமது சொத்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

‘சுவிங்’ ரேணுகா

பிரதமர் மோடி கூறுகையில்,‘‘ காமன்வெல்த் கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் இந்தியா சிறப்பான திறமை வெளிப்படுத்தியது. அனைவரும் நன்றாக விளையாடினர். ரேணுகா ‘சுவிங்’ பந்துவீச்சிற்கு ஈடு இணை யாரும் இல்லை. காமன்வெல்த் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என சாதனை படைப்பது அவ்வளவு எளிதானதல்ல,’’ என்றார். 


செஸ் நட்சத்திரங்களுக்கு வாழ்த்து

செஸ் குறித்து மோடி கூறுகையில்,‘‘செஸ் ஒலிம்பியாட்டை மாமல்லபுரத்தில் வெற்றிகரமாக நடத்தினோம். அதுமட்டுமன்றி செஸ் விளையாட்டில் நமது பாரம்பரியத்தை உலகிற்கு பறை சாற்றும் வகையில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. இதில் பதக்கம் வென்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகள்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?