Advertisement


‘ரேங்கிங்’: ரேணுகா முன்னேற்றம்

ஆகஸ்ட் 09, 2022 22:48
 Comments  
 


Renuka Singh surges to career best ranking
 

துபாய்: பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ரேணுகா, 18வது இடத்துக்கு முன்னேறினார். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பெண்கள் கிரிக்கெட்டில் அசத்தியவர்களுக்கான தரவரிசை (‘ரேங்கிங்’) பட்டியல் வெளியானது. சமீபத்திய காமன்வெல்த் விளையாட்டில் பந்து வீச்சில் மிரட்டிய இந்தியாவின் ரேணுகா சிங், 11 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து பவுலர்களுக்கான தரவரிசையில் 10 இடங்கள் முன்னேறி, ‘டாப்–20’ பட்டியலில் இடம் பெற்றார். இவர் 18வது இடத்தில் உள்ளார். இது இவரது சிறந்த தரவரிசையாக அமைந்தது. இந்தியாவின் ராதா, 14வது இடத்துக்கு முன்னேறினார். 

பேட்டிங்கில் 146 ரன்கள் விளாசிய இந்தியாவின் ஜெமிமா, 7 இடங்கள் முன்னேறி, ‘டாப்–10’ பட்டியலில் நுழைந்தார். கடந்த 2021 அக்., க்குப் பின் இப்பட்டியலில் (10 வது) இடம் பிடித்தார். மற்ற இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 2 இடம் பின்தங்கி, 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஷபாலி வர்மா ஆறாவது இடத்தில் பின்தங்கினார். 2 இடம் முந்திய தீப்தி சர்மா, 36வது இடம் பெற்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?