Advertisement


உள்ளம் எல்லாம் இசை வெள்ளம்... *காமன்வெல்த் நிறைவு விழா கோலாகலம்

ஆகஸ்ட் 09, 2022 22:29
 Comments  
 


commonwealth games 2022 india, closing ceremony,
 

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு நிறைவு விழாவில் உள்ளம் கவர் இசை நிகழ்ச்சிகள், கண்கவர் வாணவேடிக்கைகள் அரங்கேறின. 

இங்கிலாந்தில் பர்மிங்காமில் 22வது காமன்வெல்த் விளையாட்டு(ஜூலை 28–ஆக.8)நடந்தது. 12 நாட்கள் நடந்த பல்வேறு போட்டிகளில் 72 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் திறமை வெளிப்படுத்தினர். மல்யுத்தம், பளுதுாக்குதல், பாட்மின்டன், லான் பவுல்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் அசத்திய இந்தியா, 61 பதக்கங்களுடன்(22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம்) நான்காவது இடம் பிடித்தது. 

நேற்று பர்மிங்காமில் உள்ள அலெக்சாண்டர் மைதானத்தில் வண்ணமயமான நிறைவு விழா நடந்தது. இதில் இருபதுக்கும் மேற்பட்ட இசை குழவினரின் பேண்ட் வாத்தியம், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்டீவன் கபூரின்(செல்லமாக ‘அப்பாச்சி இந்தியன்’) ‘பூம் ஷாக்க லாக்’ பாடல் அனைவரையும் கவர்ந்தது. இங்கிலாந்து இசை ஜாம்பவான்கள் கோல்டி, பெவர்லி நைட், ஜோர்ஜா ஸ்மித், லாரா மவுலா அசத்தினர். நடன கலைஞர்களின் ஆட்டமும் வியக்க வைத்தது. அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடியை ஏந்தியவாறு சரத் கமல்(டேபிள் டென்னிஸ்), நிகாத் ஜரீன்(குத்துச்சண்டை) உற்சாகமாக வந்தனர். அப்போது அரங்கேறிய ‘பஞ்சாப் பாங்க்ரா’ ஆடல், பாடல் நிகழ்ச்சியால் அரங்கம் அதிர்ந்தது. 

 

‘குட்–பை’ பர்மிங்காம்

பர்மிங்காம் போட்டி நிறைவு பெறுவதாக இங்கிலாந்து இளவரசர் எட்வர்ட், முறைப்படி அறிவித்தார். காமன்வெல்த் கொடி இறக்கப்பட்டது. அடுத்த காமன்வெல்த் விளையாட்டு வரும் 2026ல் ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடக்கவுள்ளது. இதற்கான காமன்வெல்த் கொடி ஆஸ்திரேலிய வீரர் பேரி லெஸ்டரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடைசியாக கண்கவர் வாணவேடிக்கையுடன், விழா இனிதே நிறைவு பெற்றது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?