Advertisement


மல்யுத்தத்தில் இந்தியா பதக்க மழை: காமன்வெல்த் விளையாட்டில் அபாரம்

ஆகஸ்ட் 06, 2022 00:44
 Comments  
 


Commonwealth Games 2022, Wrestling, India, 3 Gold, One Silver, Two Bronze
 

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு மல்யுத்தப் போட்டியில் இந்திய மல்யுத்த நட்சத்திரங்கள் பதக்க மழை பொழிந்தனர். மூன்று தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என, 6 பதக்கங்களை அள்ளினர்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான மல்யுத்தம் ‘பிரீஸ்டைல்’ 65 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, கனடாவின் லாச்லன் மெக்நீல் மோதினர். அபாரமாக ஆடிய பஜ்ரங் 9–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக (2018, 2022) தங்கப் பதக்கம் வென்றார். இது, காமன்வெல்த் விளையாட்டில் இவரது 3வது பதக்கம். இதுவரை 2 தங்கம் (2018, 2022), ஒரு வெள்ளி (2014) வென்றுள்ளார்.

 

* ஆண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ 86 கிலோ எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் தீபக் புனியா, பாகிஸ்தானின் முகமது இனாம் மோதினர். இதில் அசத்திய தீபக் புனியா 3–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தனது முதல் காமன்வெல்த் பதக்கத்தை கைப்பற்றினார்.

 

ஆண்களுக்கான 125 கிலோ போட்டியில் இந்தியாவின் மோகித் 6–0 என ‘நாக்–அவுட்’ முறையில் ஜமைக்காவின் ஆரோன் ஜான்சனை வீழ்த்தி வெண்கலம் கைப்பற்றினார்.

 

சாக் ஷி அபாரம்: பெண்களுக்கான மல்யுத்தம் 62 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சாக் ஷி மாலிக், கனடாவின் கோடினஸ் கான்சலஸ் மோதினர். ஒருகட்டத்தில் 0–4 என பின்தங்கி இருந்த சாக் ஷி, பின் எழுச்சி கண்டு ‘நாக்–அவுட்’ முறையில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இது, காமன்வெல்த் விளையாட்டில் இவரது 3வது பதக்கம். கடந்த 2014ல் வெள்ளி வென்ற இவர், 2018ல் வெண்கலம் கைப்பற்றினார்.

 

* பெண்களுக்கான மல்யுத்தம் 57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அன்ஷு மாலிக், நைஜீரியாவின் ஒடுனயோ மோதினர். இதில் ஏமாற்றிய அன்ஷு 3–7 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

 

* பெண்களுக்கான 68 கிலோ பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் திவ்யா காக்ரன், டோங்காவின் டைகர் லில்லி காக்கர் லெமாலி மோதினர். அபாரமாக ஆடிய திவ்யா, ‘நாக்–அவுட்’ முறையில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?