Advertisement


மணிகா, பவினா, சிந்து அபாரம்: காமன்வெல்த் விளையாட்டில்

ஆகஸ்ட் 05, 2022 23:41
 Comments  
 


Commonwealth Games 2022, Manika, Sindhu, Bhavina, Dipika, Joshna
 

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு டேபிள் டென்னிஸ், பாட்மின்டன் போட்டியில் இந்திய நட்சத்திரங்கள் அசத்தினர்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 22வது சீசன் நடக்கிறது. இதன் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா, சத்யன் ஜோடி 3–0 (11–7, 11–6, 11–7) என, நைஜீரியாவின் ஒமோடயோ, ஒஜோமு ஜோடியை வென்றது.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல், ஸ்ரீஜா அகுலா ஜோடி 3–1 (5–11, 11–2, 11–6, 11–5) என மலேசியாவின் சீ பெங் லியோங், யிங் ஹோ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

 

* ஆண்கள் இரட்டையர் பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், சனில் ஷெட்டி ஜோடி 3–1 (11–3, 9–11, 11–9, 11–7) என, ஆஸ்திரேலியாவின் தில்லான், யான் ஜின் ஜோடியை தோற்கடித்தது.

 

மற்றொரு போட்டியில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல், சத்யன் ஞானசேகரன் ஜோடி 3–0 (11–6, 11–1, 11–4) என வங்கதேசத்தின் ராம்ஹிம்லியன், மொஹுதாசின் அகமது ஜோடியை வென்றது.

 

* பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, தியா பராக் ஜோடி 3–0 என, டிரினிடாட் ஜோடியை தோற்கடித்தது.

 

* பெண்கள் ஒற்றையர் பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில் இந்தியாவின் மணிகா பத்ரா 4–0 என, ஆஸ்திரேலியாவின் மின்யுங் ஜீயை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா வெற்றி பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனை ரீத் டென்னிசன் தோல்வியடைந்தார்.

 

* ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அஜந்தா சரத் கமல் 4–0 என ஆஸ்திரேலியாவின் பின் லுாவை வென்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சத்யன் 4–0 என வடக்கு அயர்லாந்தின் பால் பெக்ரீரியை வீழ்த்தினார். 

 

பைனலில் பவினா

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு (சி 3–5) அரையிறுதியில் இந்தியாவின் பவினா படேல், இங்கிலாந்தின் சுய் பெய்லி மோதினர். அபாரமாக ஆடிய பவினா 3–0 (11–6, 11–6, 11–6) என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். இதன்மூலம் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார்.

 

பாட்மின்டன்: காலிறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த்

ஆண்களுக்கான பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இலங்கையின் துமிந்து அபேவிக்ரமா மோதினர். அபாரமாக ஆடிய ஸ்ரீகாந்த் 21–9, 21–12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

* பெண்கள் ஒற்றையர் பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில் இந்தியாவின் சிந்து 21–10, 21–9 என்ற நேர் செட் கணக்கில் உகாண்டாவின் ஹுசினாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

* பெண்கள் இரட்டையர் பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், திரீசா ஜோடி 21–2, 21–4 என, மொரீசியசின் ஜெமிமா, முங்க்ரா கணேஷா ஜோடியை வீழ்த்தியது.

 

ஸ்குவாஷ்: தீபிகா–ஜோஷ்னா அபாரம்

பெண்களுக்கான ஸ்குவாஷ் இரட்டையர் பிரிவு ‘ரவுண்டு–16’ போட்டியில் இந்தியாவின் தீபிகா பல்லீகல், ஜோஷ்னா சின்னப்பா ஜோடி 2–0 (11–4, 11–4) என்ற கணக்கில் பார்படாசின் மேகன் பெஸ்ட், அமன்டா ஹேவுட் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

 

குத்துச்சண்டை: அரையிறுதியில் ரோகித்

ஆண்களுக்கான குத்துச்சண்டை 67 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகித் தோகாஸ், நியுவின் சேவியர் மடாபா–இகினோபோ மோதினர். அபாரமாக ஆடிய ரோகித் 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் இம்முறை குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 7வது பதக்கத்தை உறுதி செய்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?