Advertisement


சுதிர் ‘தங்கம்’... ஸ்ரீசங்கர் ‘வெள்ளி’: காமன்வெல்த் விளையாட்டில் அசத்தல்

ஆகஸ்ட் 05, 2022 23:30
 Comments  
 


Commonwealth Games 2022, Birmingham, Powerlifting, Sudhir, Gold Medal, Long Jump, Sreeshankar, Silver Medal
 

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு பாரா பவர்லிப்டிங் போட்டியில் இந்தியாவின் சுதிர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர், வெள்ளி வென்றார்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில், காமன்வெல்த் விளையாட்டு 44வது சீசன் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான ‘பாரா பவர்லிப்டிங்’, ‘ஹெவிவெயிட்’ பிரிவில் இந்தியா சார்பில் சுதிர் 27, பங்கேற்றார். முதல் வாய்ப்பில் 208 கிலோ துாக்கிய இவர், அடுத்த வாய்ப்பில் 212 கிலோ துாக்கினார். மூன்றாவது வாய்ப்பில் 217 கிலோ துாக்க முயன்ற இவர், ஏமாற்றினார். அதிகபட்சமாக 212 கிலோ துாக்கி, 134.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த சுதிர், காமன்வெல்த் விளையாட்டு சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் காமன்வெல்த் விளையாட்டு பாரா பவர்லிப்டிங் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். தவிர இது, இம்முறை இந்தியாவுக்கு கிடைத்த 6வது தங்கம்.

 

சீனியர் பயிற்சியாளர்: பாரா பவர்லிப்டிங் போட்டியில் தங்கம் வென்ற சுதிர், ஹரியானா மாநிலம் சோனிபட் நகரை சேர்ந்தவர். பி.ஏ., சமஸ்கிருத பட்டதாரியான இவர், மாநில அரசு சார்பில் சீனியர் பளுதுாக்குதல் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். நான்கு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார். கடந்த 2013ல் பவர்லிப்டிங் போட்டியில் அறிமுகமான இவர், 2016ல் முதன்முறையாக தேசிய பட்டம் வென்றார். சர்வதேச அரங்கில் 2018ல் அறிமுகமான இவர், இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய பாரா விளையாட்டில் வெண்கலம் (80 கிலோ பிரிவு) வென்றார். இவர் பதக்கம் வென்ற தினத்தில் துரதிருஷ்டவசமாக அவரது தந்தை காலமானார். சுதிர், கடந்த ஜூன் மாதம் தென் கொரியாவில் நடந்த உலக பாரா பவர்லிப்டிங் ஆசிய–ஓசியானியா ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் கைப்பற்றிய இவர், இந்த ஆண்டு சீனாவில் நடக்க இருந்த ஆசிய பாரா விளையாட்டுக்கும் தகுதி பெற்றிருந்தார்.

 

ஸ்ரீசங்கர் ‘வெள்ளி’

ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில் இந்தியா சார்பில் முரளி ஸ்ரீசங்கர், முகமது அனீஸ் யாஹியா பங்கேற்றனர். முதல் மூன்று வாய்ப்பில் 7.60, 7.84, 7.84 மீ., தாண்டிய ஸ்ரீசங்கர், அடுத்த வாய்ப்பை ‘பவுல்’ செய்தார். ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 8.08 மீ., தாண்டிய ஸ்ரீசங்கர், கடைசி வாய்ப்பை ‘பவுல்’ செய்தார்.

 

மறுமுனையில் பஹாமஸ் வீரர் லகுவான் நரேன், தனது 2வது வாய்ப்பில் 8.08 மீ., தாண்டினார். இதனையடுத்து ஸ்ரீசங்கர், லகுவான் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர். பின், போட்டி விதிமுறைப்படி இவர்களது 2வது சிறந்த செயல்பாடு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் ஸ்ரீசங்கரை (7.84 மீ.,) விட அதிக துாரம் தாண்டிய லகுவான் (7.98 மீ.,) முதலிடத்தை கைப்பற்றி தங்கம் வென்றார். ஸ்ரீசங்கருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் காமன்வெல்த் விளையாட்ட நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்ற முதல் இந்திய வீரரானார். மற்றொரு இந்திய வீரர் முகமது அனீஸ், அதிகபட்சமாக 7.97 மீ., தாண்டி 5வது இடம் பிடித்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?