Advertisement


வெண்கலம் வென்றார் ரூபல்: ஜூனியர் உலக தடகளத்தில் வரலாறு

ஆகஸ்ட் 05, 2022 23:18
 Comments  
 


World U20 Athletics Championship, Rupal Chaudhary, Bronze Medal, 400m Running
 

காலி: பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் வெண்கலம் வென்ற ரூபல் சவுத்தரி, ஜூனியர் உலக தடகளத்தில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.

கொலம்பியாவில், 20 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலக தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் ரூபல் சவுத்ரி பைனலுக்கு முன்னேறினார். மொத்தம் 8 பேர் பங்கேற்ற பைனலில் இலக்கை 51.85 வினாடியில் கடந்து மூன்றாவது இடம் பிடித்த ரூபல், வெண்கலம் வென்றார். இது, இம்முறை இவர் கைப்பற்றிய 2வது பதக்கம். ஏற்கனவே கலப்பு அணிகளுக்கான 4*400 மீ., ‘ரிலே’ ஓட்டத்தில் ரூபல் சவுத்தரி, பரத் ஸ்ரீதர், பிரியா மோகன், கபில், அடங்கிய இந்திய அணி வெள்ளி வென்றிருந்தது. இதன்மூலம் ஜூனியர் உலக தடகளத்தில் (20 வயது) இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாறு படைத்தார். முதலிரண்டு இடங்களை பிரிட்டனின் யெமி மேரி ஜான் (51.50 வினாடி), கென்யாவின் டமரிஸ் முதுங்கா (51.71 வினாடி) பிடித்தனர்.

 

இரண்டாவது இந்தியர்: தவிர, 400 மீ., ஓட்டத்தில் தனது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்தார் ரூபல். இதற்கு முன், இம்முறை அரையிறுதியில் இலக்கை 52.27 வினாடியில் கடந்திருந்தது இவரது சிறந்த செயல்பாடாக இருந்தது. ஜூனியர் உலக தடகளத்தின் 400 மீ., ஓட்டத்தில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியரானார் ரூபல். ஏற்கனவே 2018ல் பின்லாந்தில் நடந்த போட்டியில் இந்தியாவின் ஹிமா தாஸ் (51.46 வினாடி) தங்கம் வென்றிருந்தார். தவிர, ஜூனியர் உலக தடகள வரலாற்றில் இதுவரை இந்தியாவுக்கு 9 பதக்கம் (2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம்) கிடைத்துள்ளன.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயி மகளான ரூபல், இந்த ஆண்டு துவக்கத்தில் 20 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய பெடரேஷன் கோப்பை தடகளத்தின் 400 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றிருந்தார்.

 

இம்முறை இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, இரண்டு பதக்கம் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டு நைரோபியில் நடந்த போட்டியில் இந்தியாவுக்கு 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 3 பதக்கம் கிடைத்திருந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?