Advertisement


தெற்காசிய கால்பந்து: கோப்பை வெல்லுமா இந்தியா

ஆகஸ்ட் 04, 2022 22:28
 Comments  
 


SAFF U20 Soccer, Final, India, Bangladesh
 

புவனேஸ்வர்: தெற்காசிய கால்பந்து (20 வயது) பைனலில் இன்று இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், 20 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 4வது சீசன் நடக்கிறது. இதில் இந்தியா, நேபாளம், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு என, 5 அணிகள் லீக் சுற்றில் மோதின. முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடித்த வங்கதேசம் (10 புள்ளி), இந்தியா (9) அணிகள் பைனலுக்கு தகுதி பெற்றன. பைனல் இன்று நடக்கிறது.

 

இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் வங்கதேசத்திடம் (1–2) வீழ்ந்தது. பின் எழுச்சி கண்டு இலங்கை (4–0), நேபாளம் (8–0), மாலத்தீவு (1–0) அணிகளை வீழ்த்தியது. நான்கு போட்டியில், 3 வெற்றி, ஒரு தோல்வியை பெற்று, 3வது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. முன்னதாக விளையாடிய 2 பைனலில், ஒரு முறை (2019) கோப்பை வென்றது. ஒரு முறை (2015, எதிர்: நேபாளம்) தோல்வியடைந்தது. பைனலில் அசத்தும் பட்சத்தில், இம்முறை லீக் சுற்றில் வங்கதேசத்திடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ளலாம். தவிர, அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை நேபாளத்துடன் (2015, 2017) பகிர்ந்து கொள்ளலாம்.

 

லீக் சுற்றில் இலங்கை (1–0), இந்தியா (2–1), மாலத்தீவு (4–1)  அணிகளை வீழ்த்திய வங்கதேச அணி, நேபாளத்துக்கு (1–1) எதிராக ‘டிரா’ செய்தது. நான்கு போட்டியில் 3 வெற்றி, ஒரு ‘டிரா’ என தோல்வியை சந்திக்காமல், 3வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. முன்னதாக விளையாடிய 2 பைனலிலும் (2017ல் எதிர்: நேபாளம், 2019ல் எதிர்: இந்தியா) தோல்வியை தழுவியது. வங்கதேசத்தின் ‘பார்ம்’ தொடரும் பட்சத்தில் முதன்முறையாக கோப்பை வென்ற சாதிக்கலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?