Advertisement


கோவை கனவை கலைத்த மழை: சேப்பாக்கத்துடன் கோப்பையை பகிர்ந்தது

ஜூலை 31, 2022 23:53
 Comments  
 


TNPL 2022, T20 Cricket, Kovai, Chepauk, Rain, Trophy Shared, Sai Sudharsan, Shahrukh Khan, Kaushik Gandhi
 

கோவை: டி.என்.பி.எல்., பைனலில் மழை குறுக்கிட, கோவை, சேப்பாக்கம் அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

கோவைராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் நடந்த ஆறாவதுடி.என்.பி.எல்., தொடரின் பைனலில் கோவை,சேப்பாக்கம் அணிகள் மோதின. கோவை அணி முதல் முறையாக கோப்பை வெல்லும் கனவுடன் களமிறங்கியது. சேப்பாக்கம் அணி ‘ஹாட்ரிக்’ கோப்பை ஆசையில் களம் புகுந்தது. 

 

17 ஓவர் போட்டி: மழை பெய்ய, ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின், 17 ஓவர் போட்டியாக நடத்த முடிவு செய்யப்பட்டது. ‘டாஸ்’ வென்ற சேப்பாக்கம் அணி, ‘பவுலிங்’ தேர்வு செய்தது.

 

சுதர்ஷன் விளாசல்: கோவை அணிக்கு சுரேஷ் குமார்(5) ஏமாற்றினார். பின் சாய் சுதர்ஷன், கங்கா ஸ்ரீதர் ராஜூ அசத்தினர். சந்தீப் ஓவரில் ராஜூ ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். சாய் கிஷோர் வீசிய போட்டியின் ஐந்தாவது ஓவரில், சுதர்ஷன் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார். ராஜூ, 27 ரன்களுக்கு சோனு யாதவ் பந்துவீச்சில் அவுட்டானார். அலெக்சாண்டர் வீசிய போட்டியின் 8வது ஓவரில் சுதர்ஷன் ஒரு பவுண்டரி, சிக்சர் அடிக்க, மொத்தம் 21 ரன்கள் எடுக்கப்பட்டன.

 

கிஷோர் திருப்பம்: போட்டியின் 10வது ஓவரை வீசிய சாய் கிஷோர் திருப்புமுனை ஏற்படுத்தினார். 2வது பந்தில் முகிலேஷ்(7), 4வது பந்தில் ஷிஜித் சந்திரனை(0) வெளியேற்றினார். கோவை அணி 10 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்தது. இந்த தருணத்தில் களமிறங்கிய கேப்டன் ஷாருக் கான், சித்தார்த் பந்தை சிக்சருக்கு அனுப்பி உள்ளூர் ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார். சாய் கிஷோர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சுதர்ஷன் 30 பந்துகளில் அரைசதம் எட்டினார். பின் சந்தீப் பந்தில் ஒரு பவுண்டரி அடித்த ஷாருக், ரன் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டார். மறுபக்கம் சோனு யாதவ் ஓவரில் வரிசையாக இரு பவுண்டரி அடித்து மிரட்டினார் சுதர்ஷன். கேப்டன் ஷாருக்கான் (22) ஓரளவு கைகொடுத்தார். சாய் சுதர்சன் (65) நம்பிக்கை தந்தார். அபிஷேக் தன்வர் (1), மணிஷ் ரவி (2), 

பாலு சூர்யா (0) ஏமாற்றினர்.

 

கோவை அணி 17 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. அஜித் ராம் (5), வெள்ளையப்பன் யுதீஸ்வரன் (1) அவுட்டாகாமல் இருந்தனர். சேப்பாக்கம் சார்பில் சந்தீப் வாரியர் 4, சாய் கிஷோர் 3, சோனு யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

மழை குறுக்கீடு: சவாலான இலக்கை விரட்டிய சேப்பாக்கம் அணிக்கு கவுசிக் காந்தி(1), ஜெகதீசன்(2) நிலைக்கவில்லை. 4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 14 ரன் எடுத்த போது, மீண்டும் மழை குறுக்கிட, ஆட்டம் நிறுத்தப்பட்டது.  ‘டக்வொர்த்–லீவிஸ்’ விதிமுறைப்படி வெற்றிக்கு 5 ஓவரில் 40 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். இதன் அடிப்படையில் சேப்பாக்கம் பின்தங்கி இருந்தது. இன்னும் ஒரு ஓவர் நடத்தப்பட்டிந்தால், கோவைக்கு வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும். மழை தொடர்ந்ததால், சாம்பியன் கனவு தகர்ந்தது. போட்டி பாதியில் ரத்தானதால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொண்டன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?