Advertisement


பைனலுக்கு முன்னேறியது கோவை: நெல்லை அணி ஏமாற்றம்

ஜூலை 29, 2022 22:35
 Comments  
 


TNPL 2022, T20 Cricket, Qualifier 2, Nellai Loss to Kovai, Sanjay Yadav, Shahrukh Khan
 

கோயம்புத்துார்: பரபரப்பான டி.என்.பி.எல்., தகுதிச் சுற்று–2 போட்டியில் கடைசி பந்தில் ‘திரில்’ வெற்றி பெற்ற கோவை அணி, பைனலுக்கு முதன்முறையாக முன்னேறியது. அரைசதம் கடந்த ஷாருக் கான் வெற்றிக்கு கைகொடுத்தார். நெல்லை அணி வெளியேறியது.

தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 6வது சீசன் நடக்கிறது. இதன் பைனலுக்கு சேப்பாக்கம் அணி முன்னேறியது. கோயம்புத்துாரில் நடந்த தகுதிச் சுற்று–2ல், ‘எலிமினேட்டரில்’ வெற்றி பெற்ற கோவை அணி, தகுதிச் சுற்று–1ல் தோல்வியடைந்த நெல்லை அணியை சந்தித்தது. ‘டாஸ்’ வென்ற கோவை அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

 

நல்ல துவக்கம்: நெல்லை அணிக்கு ஸ்ரீ நிரஞ்சன், சூர்யபிரகாஷ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. மணிஷ் ரவி வீசிய 2வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த நிரஞ்சன், ஷாருக்கான் வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 38 ரன் சேர்த்த போது ஷாருக்கான் பந்தில் நிரஞ்சன் (34) அவுட்டானார். சூர்யபிரகாஷ் (25) ஆறுதல் தந்தார்.

 

சிக்சர் மழை: பின் இணைந்த பாபா அபராஜித், சஞ்சய் யாதவ் ஜோடி சிக்சர் மழை பொழிந்தது. பாலு சூர்யா, அஜித் ராம் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்தார் அபராஜித். திவாகர் வீசிய 13வது ஓவரில் 3 சிக்சர் பறக்கவிட்ட சஞ்சய், சாய் சுதர்சன் (1 சிக்சர்), பாலு சூர்யா (1), அஜித் ராம் (2) பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பி 22 பந்தில் அரைசதம் கடந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 88 ரன் சேர்த்த போது அபிஷேக் தன்வர் பந்தில் அபராஜித் (44 ரன், 3 சிக்சர்) அவுட்டானார். அபாரமாக ஆடிய சஞ்சய், 55 ரன்னில் (7 சிக்சர்) ஆட்டமிழந்தார்.

 

கேப்டன் பாபா இந்திரஜித் (9) நிலைக்கவில்லை. அபிஷேக் தன்வர் (2 சிக்சர்), மணிஷ் ரவி (3) பந்துகளை சிக்சருக்கு அனுப்பிய அஜிதேஷ் (38 ரன், 5 சிக்சர்) நம்பிக்கை தந்தார். நெல்லை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 206 ரன் எடுத்தது. கோவை சார்பில் அபிஷேக் தன்வர், மணிஷ் ரவி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

 

ஷாருக்கான் அசத்தல்:  சவாலான இலக்கை துரத்திய கோவை அணிக்கு சுரேஷ் குமார் (21), கங்கா ஸ்ரீதர் ராஜு (28) நல்ல அடித்தளம் அமைத்தனர். சாய் சுதர்சன் (53) அரைசதம் கடந்தார். அபிஷேக் தன்வர் (23) ஆறுதல் தந்தார்.

 

கடைசி ஓவரில் கோவையின் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டன. ஸ்ரீ நிரஞ்சன் வீசிய 20வது ஓவரின் முதலிரண்டு பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த கேப்டன் ஷாருக்கான் 22 பந்தில் அரைசதம் கடந்தார். மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஷாருக்கான், அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், ஐந்தாவது பந்தில் மணிஷ் ரவி (2) அவுட்டாக ‘டென்ஷன்’ எகிறியது. கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்த அஜித் ராம் வெற்றியை உறுதி செய்தார்.

 

கோவை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 209 ரன் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வெற்றி பெற்றது. ஷாருக்கான் (58), அஜித் ராம் (1) அவுட்டாகாமல் இருந்தனர். பைனலில் (ஜூலை 31) கோவை, சேப்பாக்கம் அணிகள் மோதுகின்றன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?