Advertisement


தெற்காசிய கால்பந்து: இந்தியா வெற்றி

ஜூலை 29, 2022 22:32
 Comments  
 


South Asia Football Federation, SAFF U20 Soccer, India Beat Sri Lanka
 

புவனேஸ்வர்: தெற்காசிய கால்பந்து (20 வயது) லீக் போட்டியில் அசத்திய இந்திய அணி 4–0 என, இலங்கையை வீழ்த்தியது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், 20 வயதுக்குட்பட்டோருக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், மாலத்தீவு, வங்கதேசம், இலங்கை என 5 அணிகள் பங்கேற்கின்றன.

 

முதல் போட்டியில் வங்கதேசத்திடம் வீழ்ந்த இந்திய அணி, தனது இரண்டாவது லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொண்டது. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தaது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு பார்த்திப் சுந்தர் கோகோய் 2 (69, 90+3வது நிமிடம்), ஹிமான்ஷு ஜாங்ரா (50வது), குர்கிரத் சிங் (74வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். கடைசி நிமிடம் வரை போராடிய இலங்கை அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

 

இந்திய அணி, தனது மூன்றாவது லீக் போட்டியில் (ஜூலை 31) நேபாளத்தை எதிர்கொள்கிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?