கொழும்பு: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் சுரேஷ்குமார், சோமானி ஜோடி முன்னேறியது.
இலங்கையில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சுரேஷ்குமார், சோமானி ஜோடி, செக் குடியரசின் பாட்ரிக், தாய்லாந்தின் பாலபூம் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 6–3, 6–2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சுரேஷ்குமார், ஜப்பானின் டகடாவை சந்தித்தார். இதில் சுரேஷ்குமார் 6–1, 7–6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் திக்விஜய் சிங், இலங்கையின் நிலவீராவை 6–1, 6–2 என்ற செட்டில் வீழ்த்தினார். மற்ற இரண்டாவது சுற்று போட்டிகளில் இந்தியாவின் கல்யாண்பூர், விஸ்வகர்மா, ரிஷிரெட்டி, பிரஜ்வல் தேவ் வெற்றி பெற்றனர்.