Advertisement


நெல்லை–கோவை பலப்பரீட்சை * பைனல் வாய்ப்பு யாருக்கு

ஜூலை 28, 2022 22:17
 Comments  
 


TNPL League cricket, tamilnadu covai vs Nellai
 

கோவை: டி.என்.பி.எல்., தகுதிச்சுற்று 2ல் நெல்லை, கோவை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெல்லும் அணி பைனலுக்கு செல்லும்.

தமிழகத்தில் டி.என்.பி.எல்., தொடரின் ஆறாவது சீசன் நடக்கிறது. சேப்பாக்கம் அணி 2016, 2017, 2019, 2021, 2022 என ஐந்தாவது முறையாக பைனலுக்குள் நுழைந்தது. ‘எலிமினேட்டர்’ போட்டியில் கோவையிடம் தோற்ற மதுரை தொடரில் இருந்து வெளியேறியது. இன்று கோவை, ராமகிருஷ்ணா கல்லுாரி மைதானத்தில் நடக்கும் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் நெல்லை, கோவை அணிகள் மோதுகின்றன.

நெல்லை அணியை பொறுத்தவரையில் லீக் சுற்றில் முதல் 6 போட்டியிலும் வெற்றி பெற்று, ‘பிளே ஆப்’ முன்னேறியது. பின் திடீரென என்ன ஆனது எனத் தெரியவில்லை. கடைசி லீக், தகுதிச்சுற்று 1 என அடுத்தடுத்த போட்டியில் தோல்வியடைந்தது. அணியின் பேட்டிங்கும் சரிவை சந்தித்துள்ளது. அதிக ரன் குவித்த வீரர்களில் ‘டாப்–3’ பட்டியலில் இடம் பெற்ற சஞ்சய் யாதவ் (376 ரன்), பாபா அபராஜித் (352) மீண்டு வர வேண்டும். பந்துவீச்சில் டேவிட்சன் (9 விக்.,), ஹரிஷ் (9) தவிர மற்றவர்கள் ஏமாற்றுவது பலவீனம்.

ஷாருக் எழுச்சி 

கோவை அணி துவக்கத்தில் 2 போட்டியில் தோற்றது. பின் எழுச்சி பெற்ற இந்த அணி வரிசையாக 6 போட்டிகளில் வென்றுள்ளது. கேப்டன் ஷாருக்கான் பேட்டிங் (107 ரன்), பவுலிங் (10 விக்.,) என இரண்டிலும் ஜொலிக்கிறார். துவக்க வீரர் சுரேஷ்குமார் (372), சாய் சுதர்சன் (218) ரன்மழை தருகின்றனர்.

பந்துவீச்சில் அபிஷேக் 15 விக்கெட் சாய்த்து மிரட்டுகிறார். சூர்யா 10, அஜித் ராம் 9 விக்கெட் என பலமான பவுலிங் படை உள்ளது. தவிர சொந்தமண்ணில் விளையாடுவதும் கூடுதல் பலம் என்பதால், இன்று பைனலுக்கு செல்லலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?