அட்லாண்டா: ஏ.டி.பி., டென்னிஸ் தொடரின் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன்.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஆண்களுக்கான ஏ.டி.பி., தொடர் நடக்கிறது. இதற்கான ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், அமெரிக்காவின் கோஸ்லோவை எதிர்கொண்டார். இதில் ராம்குமார் 6–0, 6–1 என வெற்றி பெற்று அடுத்த போட்டிக்கு முன்னேறினார்.
இதில் பிரிட்டனின் டிராபருடன் மோதினார். ‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை ராம்குமார் 7–6 என வசப்படுத்தினார். அடுத்த செட்டை 3–6 என இழந்தார். மூன்றாவது, கடைசி செட்டையும் 7–6 என போராடி வென்றார்.
2 மணி நேரம், 16 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ராம்குமார் 7–6, 3–6, 7–6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.