மொனாஸ்டிர்: ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் வைதேகி, இரண்டாவது இடம் பிடித்தார்.
துனிசியாவில், பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் வைதேகி சவுத்தரி, இந்தோனேஷியாவின் பிரிஸ்கா மேடலின் நுக்ரோஹோ மோதினர். முதல் செட்டை 3–6 என இழந்த வைதேகி, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6–1 என மிகச் சுலபமாக கைப்பற்றினார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் ஏமாற்றிய வைதேகி 4–6 என இழந்தார்.
இரண்டு மணி நேரம், 42 நிமிடம் நீடித்த போட்டியில் ஏமாற்றிய வைதேகி 3–6, 6–1, 4–6 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்து, சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார்.