இந்தியானாபோலிஸ்: ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் புரவ் ராஜா, திவிஜ் சரண் ஜோடி தோல்வியடைந்தது.
அமெரிக்காவின் இந்தியானாபோலிஸ் நகரில், ஆண்களுக்கான ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் புரவ் ராஜா, திவிஜ் சரண் ஜோடி, மெக்சிகோவின் ஹான்ஸ் ஹச் வெர்டுகோ, அமெரிக்காவின் ஹன்டர் ரீஸ் ஜோடியை எதிர்கொண்டது.
‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை 6–7 என இழந்த புரவ் ராஜா, திவிஜ் சரண் ஜோடி, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6–3 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டை பிரேக்கரில்’ ஏமாற்றிய இந்திய ஜோடி 7–10 எனக் கோட்டைவிட்டது. முடிவில் புரவ் ராஜா, திவிஜ் சரண் ஜோடி 6–7, 6–3, 7–10 என்ற கணக்கில் தோல்வியடைந்து, இரண்டாவது இடம் பிடித்தது.