Advertisement


நண்பரை கொலை செய்தாரா லக்ரா * ஹாக்கி அரங்கில் அதிர்ச்சி

ஜூன் 28, 2022 23:21
 Comments  
 


Olympic medallist hockey player Birender Lakra accused of involvement in murder of friend
 

கட்டாக்: நண்பரை கொலை செய்ததாக இந்திய ஹாக்கி வீரர் பிரேந்திர லக்ரா மீது புகார் எழுந்துள்ளது. 

இந்திய ஹாக்கி அணியின் நட்சத்திர வீரர் பிரேந்திர லக்ரா 32. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அணியில் இடம் பெற்றவர். ஒடிசாவை சேர்ந்த இவர், புவனேஸ்வரில் உள்ள அபார்ட்மென்ட்டில் தனது தோழி மஞ்சித் டிடே, நண்பர் ஆனந்த் டோப்போ உடன் வசித்து வந்தார். கடந்த பிப். 28ல் ஆனந்த் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

நான்கு மாதம் முடிந்த நிலையில், ஆனந்த் கொலை செய்யப்பட்டதாக அவரது தந்தை பந்தன் டோப்போ புயலை கிளப்பியிருக்கிறார். இதில் பிரேந்திர லக்ராவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். 

இது குறித்து பந்தன் டோப்போ கூறியது:

குழந்தை பருவத்தில் இருந்தே ஆனந்த், பிரேந்திர லக்ரா நல்ல நண்பர்கள். சம்பவம் நடந்த நாளில் ஆனந்த் சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகவும் அலைபேசி மூலம் லக்ரா கூறினார். சிறிது நேரத்திற்கு பின் ஆனந்த மரணம் அடைந்து விட்டதாக சொன்னார். உடனே நாங்கள் ரூர்கலாவில் இருந்து புவனேஸ்வர் புறப்பட்டோம். நீண்ட நேரம் வலியுறுத்திய பின் உடலை காண்பித்தனர். கழுத்து பகுதியில் கை வைத்து அழுத்தியது போன்ற அடையாளங்களை காண முடிந்தது. இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. லக்ராவுக்கு தொடர்பு இருக்கலாம் என தோன்றியது. கழுத்தை நெரித்து அல்லது விஷம் கொடுத்து கொலை செய்திருக்க வேண்டும். ‘போஸ்ட் மார்டம்’ அறிக்கையில் தற்கொலை என குறிப்பிட்டு இருந்தது அதிர்ச்சி அளித்தது. சம்பவம் நடந்த அறையில் மூன்று பேர் இருந்ததாக கூறுகின்றனர். உண்மையில் நான்கு பேர் இருந்துள்ளனர். நான்காவது நபரை மறைக்கின்றனர்.

என் மகனின் மரணம் தொடர்பாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய போலீசார் மறுத்தனர். பின் துணை கமிஷனர் அலுவலத்தில் புகாரை பதிவு செய்தேன். நான்கு மாதங்கள் முடிந்த போதும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது மகன் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். ஒடிசா போலீசார் மீது நம்பிக்கை இல்லை. டி.எஸ்.பி., அந்தஸ்தில் லக்ரா இருப்பதால் அவரை பாதுகாக்க முயல்கின்றனர். எனது மகனின் மர்ம மரணம் தொடர்பாக சி.பி.ஐ., போன்ற சுதந்திரமான அமைப்பு விசாரிக்க வேண்டும். 

இவ்வாறு பந்தன் டோப்போ கூறினார்.

இது குறித்து லக்ரா தரப்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை. தற்போது பெங்களூருவில் நடக்கும் தேசிய பயிற்சி முகாமில், முன்னாள் கேப்டன் சர்தார் சிங் கீழ் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கொலை புகார் எழுந்த நிலையில் பயிற்சி முகாமில் இருந்து லக்ரா வெளியேற்றப்படலாம்.


முக்கோண காதலா...

லக்ரா, மஞ்சித், ஆனந்த் இடையே முக்கோண காதல் இருந்திருக்கலாம். மஞ்சித்திடம் ஆனந்த் நெருக்கம் காட்டியதால் கொலை செய்யப்பட்டிருக்கலாம். இதனை மறுத்த ஆனந்த் தந்தை பந்தன் டோப்போ கூறுகையில்,‘‘கடந்த பிப்.16ல் ஆனந்த் திருமணம் நடந்தது. பிப்.28ல் மரணம் அடைந்துள்ளார். திருமணம் முடிந்த 12 நாளில் மரணம் அடைந்துள்ளார். அவரது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்தது. மஞ்சித் உடன் உறவு இருந்ததா என தெரியவில்லை. புவனேஸ்வரில் ஒன்றாக படித்தது மட்டும் தெரியும். மஞ்சித் பற்றி வேறு எதுவும் ஆனந்த் கூறியதில்லை,’’என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?