புதுடில்லி: உலக துப்பாக்கிசுடுதல் தரவரிசையில் இரு பிரிவுகளில் ‘நம்பர்–1’ வீராங்கனை ஆனார் அவனி லெஹரா.
சர்வதேச துப்பாக்கிசுடுதல் கூட்டமைப்பு சார்பில் தரவரிசைப் பட்டியல் (‘ரேங்கிங்’) வெளியானது. இந்தியாவின் பாரா துப்பாக்கிசுடுதல் வீராங்கனை அவனி லெஹரா, 10 மீ., ஏர் ரைபிள், 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் என இரு பிரிவுகளில் ‘நம்பர்–1’ இடம் பிடித்து அசத்தினார்.
டோக்கியோ சாதித்த இவர், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றுள்ளார். சமீபத்திய பாரா உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில் சிறப்பாக செயல்பட்ட இவர், 10 மீ., ஏர் ரைபிள், 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவில் தங்கம் வென்றார். இதையடுத்து தற்போது முதலிடம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து அவனி லெஹரா வெளியிட்ட செய்தியில்,‘உலக தரவரிசையில் இரு பிரிவுகளில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சாதனை இன்னும் சிறப்பாக செயல்பட துாண்டுகோலாக அமையும்,’’ என்றார்.