Advertisement


மீண்டும் வெல்லுமா இந்தியா * இன்று அயர்லாந்துடன் 2வது ‘டி–20’

ஜூன் 27, 2022 22:42
 Comments  
 


India Tour of Ireland T 20 Cricket 11
 

டப்ளின்: இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் இரண்டாவது ‘டி–20’ போட்டி இன்று நடக்கிறது. இதில் வென்று இந்தியா கோப்பை வெல்ல காத்திருக்கிறது.

அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இரண்டு போட்டிகளும் டப்ளினில் நடக்கின்றன.

சுலப வெற்றி

மழை காரணமாக முதல் போட்டி தலா 12 ஓவர்களாக நடந்தது.  அயர்லாந்து அணி 108/4 ரன் எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷான் (26 ரன்), தீபக் ஹூடா (47 ரன், 29 பந்து) ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. இந்திய அணி 9.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 111 ரன் எடுத்து சுலபமாக வென்றது. தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது. 

சபாஷ் ஹூடா

இன்று இரண்டாவது போட்டி நடக்கிறது. முதல் போட்டியைப் போல இஷான் கிஷான், தீபக் ஹூடா ஜோடி சிறப்பான துவக்கம் தரலாம். கணுக்கால் காயத்தால் அவதிப்பட்ட ருதுராஜ், இன்று ரன் சேர்ப்பார் என ரசிகர்கள் நம்புகின்றனர். 

‘மிடில் ஆர்டரில்’ சூர்யகுமார் மீள முயற்சிக்கலாம். முதல் சவாலில் ஜொலித்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (24 ரன்), மீண்டும் வென்று கோப்பை வசப்படுத்த காத்திருக்கிறார். பின் வரிசையில் தினேஷ் கார்த்திக் கைகொடுக்க உள்ளார்.

சகால் நம்பிக்கை

வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர் வழக்கம் போல நம்பிக்கை தருகிறார். உம்ரான் மாலிக், அவேஷ் கான் இன்று விக்கெட் வேட்டை நடத்த வேண்டும். சுழலில் சகால் போல அக்சர் படேலும் கட்டுக்கோப்பாக செயல்பட்டால் நல்லது. 

டெக்டர் பலம்

அயர்லாந்து அணிக்கு ‘மிடில் ஆர்டர்’ வீரர் டெக்டர் (64 ரன்) ரன்மழை பொழிகிறார். கேப்டன் பால்பிர்னே, பால் ஸ்டெர்லிங் ஜோடி துவக்கத்தில் மீண்டு வர காத்திருக்கிறது. கரேத் டிலானி, டாக்ரெல், ஜோஷ் லிட்டில் உள்ளிட்டோர் போராடலாம். 

 

‘புயல் வேகமா’ புவனேஷ்வர்

முதல் ‘டி–20’ போட்டியில் இந்தியாவின் புவனேஷ்வர் முதல் பந்தை 201 கி.மீ., அடுத்த பந்தை 208 கி.மீ., வேகத்தில் வீசியதாக ‘ஸ்பீடு கன்’ காண்பித்தது. இவர், உலக சாதனை படைத்ததாக ரசிகர்கள் நினைத்தனர். ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் (2003, கேப்டவுன்) பாகிஸ்தானின் சோயப் அக்தர், 161.3 கி.மீ., வேகத்தில் வீசியதே சாதனை. பிறகு தான் ‘ஸ்பீடு கன்’ தவறாக காண்பித்தது தெரிய வந்தது. இன்று ‘ஸ்பீடு கன்’ சரியாக செயல்படும் என நம்புவோம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?