Advertisement


இந்திய பவுலர்கள் அபாரம் * ஷமி, ஜடேஜா மூன்று விக்கெட்

ஜூன் 24, 2022 22:08
 Comments  
 


india tour or england warm up match
 

லீசெஸ்டர்: பயிற்சி போட்டியில் அசத்திய இந்தியாவின் முகமது ஷமி, ஜடேஜா தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

இங்கிலாந்து மண்ணில் கடந்த ஆண்டு இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2–1 என முன்னிலையில் இருந்தது. கொரோனா காரணமாக மான்செஸ்டரில் நடக்க இருந்த 5வது டெஸ்ட் ஒத்திவைக்கப்பட்டது. இப்போட்டி, வரும் ஜூலை 1–5ல் பர்மிங்காமில் நடக்கவுள்ளது. 

இதற்கு தயாராகும் விதமாக இந்திய அணி, லீசெஸ்டர்ஷயர் கவுன்டி அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 246 ரன் எடுத்திருந்தது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. முதல் நாள் ஸ்கோருடன் இந்திய அணி முதல் இன்னிங்சை ‘டிக்ளேர்’ செய்வதாக அறிவித்தது. பரத் (70), முகமது ஷமி (18) அவுட்டாகாமல் இருந்தனர். 

ஷமி கலக்கல்

பின் முதல் இன்னிங்சை துவங்கிய லீசெஸ்டர்ஷயர் அணிக்கு இந்திய ‘வேகங்கள்’ தொல்லை கொடுத்தனர். முகமது ஷமி பந்தில் ஈவன்ஸ்(1) வெளியேறினார். லீசெஸ்டர்ஷயர் அணிக்காக களமிறங்கிய புஜாராவை, ஷமி ‘டக்’ அவுட்டாக்கினார். 

சிராஜ் ‘வேகத்தில்’ கிம்பெர் (31), எவிசன் (22) வீழ்ந்தனர். பின் களமிறங்கிய ரிஷாப் பன்ட், ரிஷி படேல் அசத்தினர். ஷமி பந்தில் ரிஷி (34) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய ரிஷாப், அரைசதம் கடந்தார். ஜடேஜா ‘சுழலில்’ ரிஷாப்(76) சிக்கினார். லீசெஸ்டர்ஷயர் அணி முதல் இன்னிங்சில் 244 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 

இந்தியா சார்பில் ஷமி 3, ஜடேஜா 3, ஷர்துல் 2, சிராஜ் 2 விக்கெட் சாய்த்தனர். 

அடுத்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் 1 விக்கெட்டுக்கு 80 ரன் எடுத்து, 82 ரன் முன்னிலை பெற்றிருந்தது. பரத் (31), விஹாரி (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?