Advertisement


இந்தியா–பிரேசில் மோதல் * ‘ஜூனியர்’ உலக கோப்பை கால்பந்தில்

ஜூன் 24, 2022 21:43
 Comments  
 


India clubbed with Brazil, Morocco, USA in women U 17 World Cup
 

புதுடில்லி: பெண்களுக்கான உலக கால்பந்தில் (17 வயது) இந்திய அணி கடின பிரிவில் இடம் பெற்றது.

இந்தியாவில், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து 7வது சீசன் வரும் அக். 11–30ல் நடக்க உள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. ஒடிசா, கோவா, மஹாராஷ்டிராவில் போட்டிகள் நடக்கும். 

இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணை நேற்று வெளியானது. போட்டிகள் மதியம் 4:30, இரவு 8:00 மணிக்கு துவங்கும். இந்திய அணி ‘ஏ’ பிரிவில் கடினமான பிரேசில், அமெரிக்கா, மொரோக்கோ அணிகளுடன் இடம் பெற்றது. அக். 11ல் நடக்கும் முதல் மோதலில் இந்திய அணி அமெரிக்காவை சந்திக்கும். அடுத்து மொரோக்கோவை (அக். 14) எதிர்கொள்ளும் இந்திய அணி, அக். 17ல் பிரேசிலுடன் மோதவுள்ளது.

நடப்பு சாம்பியன் ஸ்பெயின், கடந்த சீசன் (2018) பைனலுக்கு முன்னேறிய மெக்சிகோ அணிகள் ‘சி’ பிரிவில் உள்ளன. 

இந்திய அணி மோதும் போட்டிகள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடக்கும். ஒருவேளை இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறினால், அரையிறுதி (அக். 26), பைனல் (அக். 30) நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடக்கும்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?