Advertisement


அரையிறுதியில் இந்திய ஜோடி * டேபிள் டென்னிசில் அபாரம்

ஜூன் 24, 2022 21:42
 Comments  
 


world table tennis ayhika mukherjee, India
 

ஓடோசெக்: உலக டேபிள் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்திய ஜோடி முன்னேறியது.

சுலோவேனியாவில் உலக டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஆயிகா, பிராப்தி ஜோடி, ஹங்கேரியின் டோரா, ஜார்ஜினா ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை இந்திய ஜோடி 5–11 என இழந்தது. பின் சுதாரித்துக் கொண்ட இந்திய ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அடுத்த இரு செட்டுகளை 11–8, 11–2 என வசப்படுத்தியது.

தொடர்ந்து மூன்றாவது செட்டையும் 11–5 என கைப்பற்றியது. முடிவில் இந்திய ஜோடி 3–1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய வீராங்கனைகள் ஆயிகா, பிராப்தி, சுதிர்த்தா, ஸ்வஸ்திகா என நான்கு பேரும் தோல்வியடைந்தனர். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?