Advertisement


தங்கம் வென்ற சென்னை வீரர் * தெற்காசிய டென்னிசில் அபாரம்

ஜூன் 22, 2022 22:53
 Comments  
 


Fazal Ali, Chennai, gold at South Asian TENNIS
 

சென்னை: தெற்காசிய டென்னிசில் (12 வயது) சென்னை வீரர் பசல் அலி இடம் பெற்ற இந்திய அணி தங்கம் வென்றது.

நேபாளத்தில் 12 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான ஐ.டி.எப்., தெற்காசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதற்கான இந்திய அணியில் சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவன் பசல் அலி மீர் இடம் பெற்றார். தென்னிந்தியாவில் இருந்து, இந்திய அணியில் இடம் பெற்ற ஒரே வீரர் இவர் தான்.

ஆண்களுக்கான பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பசல் அலி மீர், தவிஷ் ஜோடி, பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்திய அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் தட்டிச் சென்றது.

ஐந்து மணி நேரம்

பசல் அலி தந்தை முஜாபர் அபாஸ். மகனின் திறமையை கண்ட அபாஸ், 4 வயதில் இருந்து உரிய பயிற்சி அளித்தார். ஆந்திராவில் நடந்த தேசிய அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான தொடரை, பசல் 11 வயதில் வென்று சாதித்தார்.

இதன் பின் தினமும் ஐந்து மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டார். அகில இந்திய டென்னிஸ் சங்கம் நடத்திய சூப்பர் சீரிஸ் (2022) உட்பட பல்வேறு முக்கிய தொடரில் கோப்பை வென்றார் பசல்.

அடுத்து கஜகஸ்தானில் நடக்கவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் (12வயது) தொடருக்கான இந்திய அணியில் பசல் இடம் பெற்றுள்ளார்.

தந்தை முஜாபர் கூறுகையில்,‘‘அடுத்த தொடர் மிகவும் கடினமாக இருக்கும். கடந்த போட்டிகளில் செய்த தவறுகளை சரி செய்து, திறமையை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துவோம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?