Advertisement


ஆசிய மல்யுத்தம்: இந்தியா தங்க மழை

ஜூன் 21, 2022 23:12
 Comments  
 


Asian wrestling Championships, india,
 

பிஷ்கெக்: ஆசிய மல்யுத்தத்தில் நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கம் கிடைத்தது.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் (17 வயது, 23 வயது) போட்டி கிர்கிஸ்தானில் நடக்கிறது. 17 வயது பிரிவு போட்டிகள் நேற்று நடந்தன. பெண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ 49 கிலோ பிரிவில் இந்தியாவின் ஆஷில்யா, முதல் மூன்று சுற்றில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் 10–0 என கஜகஸ்தானின் அபிலோவாவை வீழ்த்தினார். அடுத்து நடந்த பைனலில் ஆஷில்யா, 10–0 ஜப்பானின் நட்சுமி மசூடாவை வீழ்த்தினார்.

* 43 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற ரித்திகா, நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

* 57 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஷிக்சா, 10–0 என் கஜகஸ்தானின் சோபியாவை வீழ்த்தினார். அரையிறுதியில் 8–0 என மங்கோலியாவின் தெஜின்பியை சாய்த்தார். பைனலில் ஷிக்சா 5–0 என ஜப்பானின் ஷயகாவை வென்று தங்கம் தட்டிச் சென்றார்.

* 73 கிலோ பிரிவு முதல் இரு போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவின் பிரியா, அரையிறுதியில் மங்கோலியாவின் நோமின் எர்டெனை 10–0 என வென்றார். அடுத்து நடந்த பைனலில் பிரியா, 4–0 என கஜகஸ்தானின் அலினாவை சாய்த்தார்.

* 65 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் புல்கித், உஸ்பெகிஸ்தானின் செவிச்சை 7–0 என்ற கணக்கில் வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார். இதில் கஜகஸ்தானின் குல்நுராவை 0–5 என தோற்று வெள்ளி கைப்பற்றினார்.

ஆண்களுக்கான ‘பிரீஸ்டைல்’ போட்டி (17 வயது) நடந்தன.

* 80 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பவிந்தர் சிங், 8–1 என உஸ்பெகிஸ்தானின் அபோஸ்ஜோவை வென்றார். பைனலில் பவிந்தர் சிங், அஸ்காப் (கஜகஸ்தான்) மோதினர். இதில் 5–0 என வென்ற பவிந்தர் தங்கம் கைப்பற்றினார். 

71 கிலோ பிரிவில் இந்தியாவின் நரேந்தர், அரையிறுதியில் மங்கோலியாவின் எர்டெனை 10–0 என வென்றார். பின் நடந்த பைனலில் ஜப்பானின் ஷிங்கோ அன்டோவிடம் 2–4 என தோற்றார். இதுவரை இந்தியா 10 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 14 பதக்கம் வென்றுள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?