Advertisement


அரையிறுதியில் ரொனால்டோ * ஆசிய சைக்கிளிங் போட்டியில்

ஜூன் 21, 2022 22:54
 Comments  
 


Asian Track Cycling, Ronaldo in men sprint semifinals but India draw a blank on day 4
 

புதுடில்லி: ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப் ‘ஸ்பிரின்ட்’ பிரிவில் இந்தியாவின் ரொனால்டோ அரையிறுதிக்கு முன்னேறினார்.

டில்லியில் 41வது சீனியர், 28வது ஜூனியர் ஆசிய டிராக் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான 10வது பாரா சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் நடக்கிறது.

‘சீனியர்’ பிரிவில் உலக ஜூனியர் சாம்பியன், ஆசிய சாதனையாளர், இந்தியாவின் ரொனால்டோ சிங், இந்தியாவுக்கு முதல் பதக்கம் (வெண்கலம்) வென்று தந்தார்.

நேற்று ஆண்களுக்கான ‘ஸ்பிரின்ட்’ பிரிவு போட்டிகள் நடந்தன. இதன் காலிறுதியில் இந்திய வீரர் ரொனால்டோ, தென் கொரியாவின் ஜீ ஒன் பார்க் மோதினர். இதில் 10.394 வினாடி, 10.234 வினாடி நேரத்தில் வந்து ரொனால்டோ அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதில் இன்று கஜகஸ்தானின் ஆன்ட்ரி சுகேவை எதிர்கொள்கிறார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் எசோவ், கஜகஸ்தானின் ஆன்ட்ரியிடம் தோல்வியடைந்தார்.

நேற்று நடந்த ஜூனியர் பிரிவு போட்டிகளில் இந்தியர் யாரும் சாதிக்கவில்லை. இதுவரை 2 தங்கம், 5 வெள்ளி, 13 வெண்கலம் வென்ற இந்தியா, பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. ஜப்பான் (11 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம்) முதலிடத்தில் உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?