Advertisement


சென்னை செஸ்: ஸ்ரீஹரி, ஸ்ரீஜித் வெற்றி

ஜூன் 21, 2022 22:45
 Comments  
 


Chennai Open chess Indian IMs Srihari, Nitin among leaders
 

சென்னை: சென்னை செஸ் தொடரின் நான்காவது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீஹரி, ஸ்ரீஜித் வெற்றி பெற்றனர்.

சென்னையில் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் ஓபன் தொடரின் 13வது சீசன் நடக்கிறது. 11 கிராண்ட்மாஸ்டர், 14 சர்வதேச மாஸ்டர்கள் உட்பட மொத்தம் 275 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 10 சுற்று கொண்ட இத்தொடரில் ரூ. 15 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது.

நேற்று நான்காவது சுற்று நடந்தது. இந்தியாவின் தமிழக வீரர் ஸ்ரீஹரி, சக வீரர் அர்ஜூன் திவாரியை சந்தித்தார். இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய ஸ்ரீஹரி, 37வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

தமிழகத்தின் நிதின், வியட்நாம் வீராங்கனை லுவாங் மோதினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய நிதின், 53வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜித் பால், வியட்நாம் வீராங்கனை நிகுயனை சந்தித்தார். இதில் ஸ்ரீஜித் 25 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

பிற நான்காவது சுற்று போட்டிகளில் தீபன் சக்ரவர்த்தி, சரவண கிருஷ்ணன், சுரேஷ், ராம்நாதன், ஐயப்பன், கனிஷ்கா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

நான்கு சுற்று முடிவில் இந்தியாவின் ஸ்ரீஜித் பால், பெலாரசின் ஸ்டுபாக் கிரில், ஸ்ரீஹரி, நிதின் உட்பட 8 பேர் தலா 4.0 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?