Advertisement


ஸ்மிருதி மந்தனா ‘நம்பர்–8’ * ஐ.சி.சி., தரவரிசையில்

ஜூன் 21, 2022 22:41
 Comments  
 


 Mandhana holds on to 8 th position, Jhulan slips to sixth in ICC women ODI  rankings
 

துபாய்: ஐ.சி.சி., தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 8வது இடத்தில் உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு ஒருநாள் அரங்கில் 9 போட்டியில் 411 ரன் எடுத்த இந்திய துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 25, பேட்டர்களுக்கான தரவரிசையில் 8 வது இடத்தில் தொடர்கிறார். இந்திய அணியின் மற்ற வீராங்கனைகள் யாரும் ‘டாப்–10’ பட்டியலில் இடம் பெறவில்லை.

இந்திய அணியின் புதிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (602), 13வது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களில் ஆஸ்திரேலியாவின் அலிசா (785 புள்ளி), இங்கிலாந்தின் நடாலியே சிவர் (750), ஆஸ்திரேலியாவின் பேத் மூனே (748) உள்ளனர்.

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்த ஆண்டு 12 விக்கெட் சாய்த்த, இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி 39, (663) 5வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

மற்றொரு இந்திய வீராங்கனை ராஜேஸ்வரி (591) 12வது இடத்தில் உள்ளார். ‘ஆல் ரவுண்டர்’ வரிசையில் தீப்தி (249) 7 வது இடத்தில் நீடிக்கிறார். ஜூலன் கோஸ்வாமி (217) 11வது இடத்தில் உள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?