Advertisement


கோப்பை வெல்லுமா மும்பை * ரஞ்சி கோப்பை பைனல் துவக்கம்

ஜூன் 21, 2022 22:39
 Comments  
 


Ranji Trophy Final, Mumbai might meets Madhya Pradesh desire
 

பெங்களூரு: ரஞ்சி கோப்பை தொடரின் பைனல் இன்று துவங்குகிறது. மும்பை, மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்தியாவின் முன்னணி முதல் தர கிரிக்கெட் தொடர் ரஞ்சி கோப்பை. இதன் 87வது சீசன் தற்போது நடக்கிறது. 38 அணிகள், 9 பிரிவுகளாக ‘ரவுண்டு ராபின்’ முறையில் லீக் சுற்றில் பங்கேற்றன.

‘நடப்பு சாம்பியன்’ சவுராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட அணிகள் வெளியேற மும்பை, மத்திய பிரதேச அணிகள் பைனலுக்கு முன்னேறின. இன்று பெங்களூருவில் துவங்கும் இப்போட்டியில் 47 வது முறையாக பைனலில் பங்கேற்கிறது மும்பை. 

இதற்கு முன் பங்கேற்ற 46 பைனலில், 41 முறை சாதித்து கோப்பை வென்றது.

இந்த ‘கோப்பை’ அனுபவம் மீண்டும் கைகொடுக்கும் பட்சத்தில் 42வது முறையாக சாதிக்கலாம். இதற்கு கடந்த 5 போட்டியில் 803 ரன் சேர்த்த சர்பராஸ் கான், காலிறுதி, அரையிறுதியில் மூன்று சதம் விளாசிய ஜெய்ஸ்வால் (419), கேப்டன் பிரித்வி ஷா (264), பவுலிங்கில் 37 விக்கெட் சாய்த்த ‘ஆல் ரவுண்டர்’ ஷாம்ஸ் (292 ரன்) மீண்டும் மிரட்டக் காத்திருக்கின்றனர்.

மத்திய பிரதேச அணிக்கு வெங்கடேஷ், அவேஷ் கான் இல்லாதது இழப்பு. இருப்பினும் ரஜத் படிதர் (506 ரன்), யாஷ் துபே (480), குமார் கார்த்திகேயா (27 விக்.,), அணிக்கு கைகொடுக்க காத்திருக்கின்றனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?