கத்தார்: உலக கோப்பை கால்பந்தில் விதிகளை மீறும் ரசிகர்களுக்கு, 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட உள்ளது.
கத்தாரில் ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் வரும் நவ. 21ல் துவங்க உள்ளது. இதற்காக உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இப்போதிருந்தே தயாராகி வருகின்றனர். மற்ற நாடுகளைப் போல் இல்லாமல், கத்தாரில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து வெளியான செய்தி: உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கும் இடங்களில் இரவு நேர பார்ட்டி களை கட்டும்.
முதன் முறையாக கத்தாரில் ரசிகர்கள் ‘ஜாலியாக’ இருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கால்பந்து போட்டியை காண வரும் ரசிகர்கள் கணவன் – மனைவியாக வந்தால் எவ்வித பிரச்னையும் இல்லை.
இரவு நேர பார்ட்டிகளும் நடக்காது. ஒவ்வொருவரும் இதை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். ஒருவேளை விதிகளை மீறி செயல்பட்டால், அவர்களுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.
தவிர சில ரசிகர்கள் போதைப் பொருட்களை கத்தாருக்கு கடத்திக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஒருவேளை இவர்கள் பிடிபட்டால் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.