Advertisement


இந்தியாவுக்கு இரண்டு வெண்கலம் * ஆசிய சைக்கிள் சாம்பியன்ஷிப்பில்

ஜூன் 20, 2022 23:13
 Comments  
 


India win two bronze on Day 3 of Asian cycling meet, Ronaldo singh
 

புதுடில்லி: ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப்பில் நேற்று இந்தியாவுக்கு இரண்டு வெண்கலம் கிடைத்தன. 

டில்லியில், 41வது சீனியர், 28வது ஜூனியர் ஆசிய டிராக் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான 10வது பாரா சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் நடக்கிறது. 

‘சீனியர்’ பிரிவில் உலக ஜூனியர் சாம்பியன், ஆசிய சாதனையாளர், இந்தியாவின் ரொனால்டோ சிங் பங்கேற்றார். 1 கி.மீ., துாரத்தை மணிக்கு 58.254 கி.மீ., வேகத்தில் கடந்தார். 1 நிமிடம், 01.798 வினாடி நேரத்தில் வந்து, வெண்கலப் பதக்கம் பெற்றார். ஒட்டுமொத்த ஆசிய சாம்பியன்ஷிப் ‘சீனியர்’ பிரிவு வரலாற்றில் இந்தியா கைப்பற்றிய முதல் பதக்கம் இதுவாக அமைந்தது.

ஜப்பானின் யுடா ஓபரா (1:01.118 வினாடி), மலேசியாவின் முகமது பாத்தில் (1:01.639) தங்கம், வெள்ளி வென்றனர்.

ஜூனியர் ஆண்களுக்கான 10 கி.மீ., பிரிவில் இந்திய வீரர் பிரிஜித் யும்னம் பங்கேற்றார். 40 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் 35 வது சுற்றில் கரபுடோவ் (கஜகஸ்தான்), ஆமிர் அலியை (ஈரான்) பின்தள்ளி மூன்றாவது இடத்துக்கு முன்னேறிய பிரிஜித், வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். தென் கொரியாவின் வராங் கிம், மலேசியாவின் அய்மன், தங்கம், வெள்ளிப்பதக்கம் பெற்றனர். 

ஜூனியர் பிரிவில் மொத்தம் 20 பதக்கம் வென்ற இந்தியா, சீனியர் அரங்கில் 1 வெண்கலம் என மொத்தம் 21 பதக்கம் வென்றுள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?