Advertisement


‘உலக’ கனவில் தினேஷ் கார்த்திக் * டிராவிட் நம்பிக்கை

ஜூன் 20, 2022 23:02
 Comments  
 


India cricket team, coach dravid, dinesh karthik
 

பெங்களூரு: ‘‘உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற வாய்ப்பு அதிகம்,’’ என டிராவிட் சூசகமாக தெரிவித்தார்.

இந்திய அணியின் அனுபவ விக்கெட்கீப்பர்/பேட்டர் தினேஷ் கார்த்திக் 37. சமீபத்திய தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ‘டி–20’ தொடரில் பேட்டிங்கில் மிரட்டினார். ராஜ்கோட்டில் நடந்த நான்காவது போட்டியில் 27 பந்தில் 55 ரன் விளாசி, வெற்றிக்கு கைகொடுத்தார். இத்தொடரில் கடைசி கட்டத்தில் களமிறங்கி ‘பினிஷராக’ அசத்தினார். 4 போட்டியில் 92 ரன் விளாசினார். இதன் சராசரி 46.00 ரன். ‘ஸ்டிரைக் ரேட்’ 158.62. இதையடுத்து வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் ‘டி–20’ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார். 

இது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் கூறியது:

ஐ.பி.எல்., போட்டிகளில் கடைசி கட்டத்தில் அசத்தினார் தினேஷ் கார்த்திக். இந்த பிரத்யேக திறன் அடிப்படையில் தென் ஆப்ரிக்க தொடருக்கு தேர்வு செய்தோம். கடைசி 5 ஓவரில் அதிரடியாக ரன் சேர்க்க விரும்பினோம்.

இதற்கேற்ப ராஜ்கோட் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவுடன் சேர்ந்து மிரட்டினார். 5 ஓவரில் 73 ரன்கள் எடுக்கப்பட்டன. தென் ஆப்ரிக்க தொடரில் கார்த்திக் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி அளித்தது. 

இந்திய அணியின் கதவுகளை லேசாக தட்டக் கூடாது, ஓங்கி அடிக்க வேண்டுமென வீரர்களிடம் அடிக்கடி கூறுவேன். தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் கதவுகளை முழுபலத்துடன் தாக்கியுள்ளார் கார்த்திக். உலக கோப்பைக்கான அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. 

தென் ஆப்ரிக்க தொடரில் கேப்டனாக களமிறங்கிய ரிஷாப் பன்ட் 5 போட்டிகளில் 58 ரன் தான் எடுத்தார். இருப்பினும் ஒரு சில போட்டிகளை வைத்து இவரது திறமையை மதிப்பீடு செய்யக் கூடாது.

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் முக்கிய அங்கம் வகிக்கிறார். அணியை சிறப்பாக வழிநடத்தினார். 0–2 என பின்தங்கிய நிலையில், தொடரை 2–2 என சமன் செய்து காட்டினார். 

‘டி–20’ உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை இன்னும் இறுதி செய்யவில்லை. 18–20 வீரர்களை முதலில் கண்டறிவோம். இதிலிருந்து சிறந்த 15 பேரை தேர்வு செய்வோம்.

இவ்வாறு டிராவிட் கூறினார்.

 

தவான் வாய்ப்பு எப்படி

இந்திய அணியின் அனுபவ துவக்க வீரர் ஷிகர் தவான், 36. சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணிக்காக 14 போட்டிகளில் 460 ரன் குவித்தார். இருப்பினும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ‘டி–20’ தொடரில் இடம் கிடைக்கவில்லை. ‘டி–20’ உலக கோப்பை தொடரிலும் இடம் பெறுவது சந்தேகமாக உள்ளது. 

இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,‘‘கேப்டன் ரோகித், லோகேஷ் ராகுல், இஷான் கிஷான், ருதுராஜ் என நிறைய துவக்க வீரர்கள் உள்ளனர். தவானுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். கேப்டன் ரோகித்–ராகுல் தான் சிறந்த துவக்க கூட்டணி. காயத்தில் இருந்து ராகுல் விரைவாக மீள வேண்டும்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?