புதுடில்லி: வியட்நாம் டென்னிசில் இந்தியாவின் திக்விஜய் சிங் இரண்டாவது இடம் பிடித்தார்.
வியட்நாமில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகத் தரவரிசையில் 928 வது இடத்திலுள்ள 22 வயது வீரர், இந்தியாவின் திக்விஜய் சிங், 433 வது இடத்திலுள்ள முன்னாள் ஜூனியர் விம்பிள்டன் சாம்பியன் வியட்நாமின் நாம் ஹோவாங்கை சந்தித்தார்.
முதல் செட்டை திக்விஜய் சிங் 6–4 என கைப்பற்றினார். இரண்டாவது செட் 5–5 என இழுபறியாக சென்றது. பின் இதை 5–7 என கோட்டை விட்டார் திக்விஜய் சிங். மூன்றாவது செட்டிலும் ஏமாற்றிய இவர் 4–6 என நழுவவிட்டார்.
மூன்றரை மணி நேரம் நடந்த போட்டியின் முடிவில் திக்விஜய் சிங் 6–4, 5–7, 4–6 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார். இரண்டாவது இடம் பிடித்து ஆறுதல் அடைந்தார்.