லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி தோல்வியடைந்தார்.
இங்கிலாந்தில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நேற்று துவங்கின. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 626 வது இடத்திலுள்ள இந்திய வீரர் யூகி பாம்ப்ரி, 94 வது இடத்தில் இருந்த ஸ்பெயினின் ஜெபட்டா மிராலெசை எதிர்கொண்டார்.
முதல் செட்டில் இருவரும் சம பலத்தில் போராடினர். முடிவில் யூகி பாம்ப்ரி 5–7 என இழந்தார். அடுத்த செட்டில் ஏமாற்றிய இவர் 1–6 என எளிதாக கோட்டை விட்டார்.
முடிவில் யூகி பாம்ப்ரி 5–7, 1–6 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்தார்.
மற்றொரு தகுதி போட்டியில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 5–7, 4–6 என செக் குடியரசின் கோபிரிவாவிடம் வீழ்ந்தார்.